தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 februari 2014

லண்டனில் ஜெயவாணி குழந்தைகளுடன் தற்கொலை செய்த சம்பவம்: புதிய தகவல்கள் கசிவு
சமூக ஆர்வலர்களின் எச்சரிக்கையினை கவனத்தில் கொள்ளாமையினால் தற்கொலை இடம்பெற்றுள்ளதாக ஜெயவாணி மற்றும் அவருடைய இரு குழந்தைகளின் மரணம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதாவது தாய் குழந்தைகளை கொல்வதற்கு சில வாரங்களின் முன்பிருந்தே அவர்களை தொடர்ச்சியாக துன்புறுத்தியதாகவும் அது தொடர்பில் சமூக சேவை அதிகாரிகளிற்கு அறிவித்த பொழுதிலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையென பராமரிப்பாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். 

தை மாதம் 26ம் நாள் வேலை முடிந்து வீடு திரும்பிய சக்திவேல் வாகீஸ்வரன் (36) தன்னுடைய ஐந்து வயது மற்றும் எட்டு மாதங்களேயான இரு குழந்தைகளின் சடலங்களையும் கறுப்பு நிற பையினுள் இருந்து கண்டெடுத்தார். அவரது மனைவியும் இறந்து சடலமாக காணப்பட்டார். 

http://www.lankaroad.com/index.php?subaction=showfull&id=1393365397&archive=&start_from=&ucat=1&
இம்மரணங்கள் ஏற்படுவதற்கு பாரிய தவறொன்று வழிவகுத்துள்ளதாக கூறப்படுகின்றது. 

திருமதி ஜெயவாணி வாகீஸ்வரனின் குழப்பகரமான மனநிலை தொடர்பாக அறிவிப்பதற்காக சிறுவர் சமூக பாதுகாப்பு உறுப்பினர்கள் பல முறை சமூக தொண்டு நிறுவன முகாமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதிலும் அவர் அத்தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்கவில்லையென குற்றஞ்சாட்டப்படுகின்றது. 

இம்மரணம் நிகழ்வதற்கு 4 வாரங்களின் முன்னர் இத்தம்பதியினர் குடும்ப பாதுகாப்பு அதிகாரிகளிடத்தே விஜயம் மேற்கொள்ள வேண்டியிருந்ததாயினும், அவர்கள் உரிய திகதியில் விஜயம் மேற்கொள்ளவில்லை. ஆகையால் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட அவதானம் செலுத்திய அதிகாரிகள் முகாமையாளரை இது தொடர்பில் தலையீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். 


முகாமையாளர் உரிய கவனத்தை செலுத்த தவறிவிட்டார். சக்திவேலின் தற்போதைய நிலை குறித்து கருத்து வெளியிட்ட அவருடைய நண்பர் கௌதமி மஹாதேவ, 

சக்திவேல் தன்னுடைய இரு குழந்தைகளை எண்ணி அழுதவாறே உள்ளார். அவரால் அவருடைய வீட்டிலும் வசிக்க இயலவில்லை. குழந்தைகளின் ஞாபகங்களினால் பெரிதும் துன்புறுகின்றார் என்று கூறினார். 

25 Feb 2014

Geen opmerkingen:

Een reactie posten