01.02.2014 அன்று உள்ள ஐநாவின் உள்ளகத் தகவலின் படி இலங்கைக்குச் சார்பாக 15 நாடுகள் எதிராக 12 நாடுகள் நடுநிலையுடன் 19 நாடுகள் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது
இதனை அடிப்படையாக வைத்து இலங்கையரசு உலக நாடுகள் பலவற்றிடமும் குறிப்பாக நடுநிலைத் தன்மையுடன் இருக்கக் கூடிய 19 நாடுகளிடமும் தன் முகவரை அனுப்பியுள்ளதுடன் எதிராக உள்ள 12 நாடுகளிடமும் தன் நியாயத்தை வழமையான முறையில் கூறத் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு இராஜதந்திரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் பல மார்ச் மாதக் கூட்டத் தொடர் தொடர்பில் பாரிய வேலைத் திட்டத்தில் ஈடுபட்டாலும் அதனை முறியடிக்க சில அரச தரப்புடன் இயங்கும் தமிழர் தரப்பை உள்நுளைக்கும் வேலைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளமை மனித உரிமை நாடுகளிடம் பலத்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜெனிவா வட்டாரங்களில் கசியத் தொடங்கியுள்ளது.
ஐ.நா செய்தித் தொடர்பாளர்
அமெரிக்க பிரேரணைக்கு பல நாடுகள் ஆதரவு! மண்டியிடுவதற்கு இலங்கை தயாராக இல்லை!
[ செவ்வாய்க்கிழமை, 04 பெப்ரவரி 2014, 12:00.02 AM GMT ]
அமெரிக்க பிரேரணைக்கு எதிராக ஆதரவு திரட்டும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விசேட பிரதிநிதியாக பல்வேறு நாடுகளுக்கு விஜயத்தை மேற்கொண்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக சர்வதேச நாடுகளுக்கு தெளிவுபடுத்தியதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
பிரேரணை தோற்கடிப்பதற்காக இலங்கைக்கு ஆதரவு வழங்க பல நாடுகள் தயாராகவுள்ளன. எனினும் பல நாடுகள் அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.
சர்வதேச சமூகத்தின் முன் மண்டியிடுவதற்கு இலங்கை தயாராக இல்லை என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா குறிப்பிட்டுள்ளார்.
http://www.lankawin.com/show-RUmsyCTYMdgq3.html
Geen opmerkingen:
Een reactie posten