மகிந்தரின் மண்ணில் சூப்பர் சிங்கர் குத்தாட்டம்! பின்னனியில் CID – “ரோ” அம்பலம்
இன்று அதிகாலை சிறிலங்காவில் தரையிறங்கினார்கள்.. இதில் திவாகரின் நிலை இன்னமும் தெரியவில்லை ஆனால் அவரும் அங்கு சென்றுவிட்டதாகவும் தகவல் வருகிறது, அது உறுதிப்படுத்தப்படவில்லை. புலம்பெயர் தேசத்தில் இவர்களைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள.
தமிழகத்தில் இவர்களுக்கு கொடுக்கும் எதிர்ப்பு இனி ஒரு தமிழனுக்கு இவ்விதம் செய்யும் எண்ணத்தை நினைத்துபார்கவே அஞ்சவேண்டும்! இவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்ளை உடனடியாக தமிழகம் திருப்ப அழுத்தம்; கொடுக்க வேண்டும் என தமிழக கலைஞர்களின் குரல் வலுவடைந்து வருவதாகவும்
விஜய் தொலைக்காட்சியை கண்டித்து நடவடிக்கை எடுக்க தமிழக மாணவர்கள் உடனடியாக செயலில் இறங்க வேண்டும் இது விஜய் தொலைகாட்சி முகவரி அதில் நமது எதிர்ப்பை தெரிவிப்போம். என மானவர் அமைப்புக்கள் போர்கொடி உயர்த்தியுள்ளதுடன் தமிழகத்தில் பாரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
இதில் பங்கு பற்றும் சூப்பர் சிங்கருக்கு இலங்கையில் நடப்பது பற்றி கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு முழுமையான விபரம் வழங்கப்படமாலே இலங்கை அழைத்துச் சென்றனர் என்பதுடன் பிரல்ய பாடகர்களை அழைத்து இவ் நிகழ்வு நடத்த முயற்சித்த போது அது பயனற்ற நிலையில் இவர்களை பயன் படுத்தியதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூப்பர் சிங்கறில் வெற்றியீட்டிய மற்றும் ஏனைய ஒரு சில போட்டியாளர்களை ஜெனிவாவை திசை திருப்பி தமிழனின் மனநிலையை மாற்ற இந்திய புலனாய்வு துறை “ரோ” மற்றும் இலங்கை புலனாய்வு அமைப்பு இணைந்தே இந்த வேலைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அன்மையில் இலங்கை இந்திய நட்புறவு சந்திப்பு இலங்கையில் நடந்த வேளை அங்கு சென்றிருந்த இந்திய “ரோ” அமைப்பின் தலைவர் ராம் இந்தத் தகவலைப் பரிமாறியதாகவும் அதற்காக முதலீடுகளை வீடமைப்பு உட்கட்டமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச இருபது லட்சம் ரூபாய்களை இந்த பாடகர்களுக்கு வழங்கியதுடன் இதன் பின்னனியில் இந்திய புலனாய்வு அமைப்பு இருப்பது அம்பலமாகியுள்ளது
அத்துடன் ஐரோப்பாவில் மக்களின் போராடும் மனநிலையை குழப்புவதற்காக தமிழர்கள் அதிகமாக வாழும் நாடு ஒன்றில் இதே சூப்பர் சிங்கரை களமிறக்கி ஐ.நாவின் தீர்மானம் வரும் நாளில் மக்கள் மன நிலையைக் குழப்பும் வேலையை இந்திய ரோ அமைப்பு கோத்தாபாயவிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அதற்காக சில தமிழ் தனவந்தர்கள் ஆயத்தமாகி நாட்களையும் குறித்துள்ளதாகவும் குறித்த தமிழர் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கொழும்பில் முகாமிட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தடன் தமிழ் கலைஞர்களை புறம் தள்ளி இந்தியாவிடம் மன்டியிட்டு மானம் இழந்த பிழைப்பு நடத்துவதை இன்னும் தமிழர்கள் புரியவில்லை அது மட்டுமல்லாது பல தமிழ் கலைஞர்கள் பல திறமைகளுடன் உள்ள நிலையில் ஏன் இந்தியக் கலைஞர்கள் இதிலும் பாரிய சூழ்ச்சி உள்ளது இதை புரியுமா ஐரோப்பா இளசுகள் அல்லது அங்கு சென்று கூத்து கும்மாளமா தக்கபதில் எடுத்தால் காலத்தில் சிறந்ததாகும்…





Geen opmerkingen:
Een reactie posten