தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 8 januari 2014

சிங்கள தூபியுடன் யாழில் பாரிய சிங்கள நகரம் ஒன்று உருவாகிறது !


இனி யாழ்பாணம் என்பதனை "ஏல்பாண" என்று அழைக்கலாம் போல இருக்கே ! ஆம் யாழில் உருவாகும் பாரிய சிங்கள கிராமம் இதுவாகத்தான் இருக்க முடியும். இனியும் தமிழர்கள் விழித்துக்கொள்ளவில்லை என்றால், சொந்த நாட்டில் அடையாளம் தெரியாதவர்களாக இருப்பதை தவிர வேறு வழியே இல்லாமல் போகும் ! வாருங்கள் விடையத்துக்கு போகலாம்,

யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கு பகுதியில், மக்களின் காணிகளை ஒன்றிணைத்து ஒரு நகரத்தையே உருவாக்கி வருகிறது இலங்கை இராணுவம் என்றால் உங்களால் நம்ப முடியுமா ? இப்பகுதியில் உள்ள தமிழர்களின் வீடுகள், பாடசாலைகள் , மருத்துவமனை உள்ளிட்ட பல கட்டடங்களை அவர்கள் புல்டோசன் கொண்டு இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளார்கள். பகலும் இரவுமாக இந்த வேலை தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. உயர் பாதுகாப்பு வலையம் என்று தாமே ஒரு வலையத்தை(பிரதேசத்தை) அறிவித்து, அந்த பிரதேசத்தில் உள்ள தமிழர்களின் கட்டங்களை இடித்து தாம் புதிதாக குடியிருப்புகளை நிர்மாணித்து வருகிறார்கள். அதுமட்டுமல்ல, இந்த புது நகரத்தினுள் , வீடுகள் கடைகள் வியாபார நிலையங்கள் என்றும் கட்டி வருகிறார்கள்.

யாழ் நகரில் உள்ள டவுன்(பஸ் நிலையம் போல) அதனை மிஞ்சும் அளவுக்கு கடைகள் மற்றும் வியாபார நிலையங்கள் அங்கே போடப்பட்டு வருகிறது. எவரும் உள்ளே சென்று பார்க்க அனுமதி இல்லை. ஆனால் வேலைகள் பூர்தியாகியவுடன், இராணுவம் தமது உறவினர்களை அங்கே குடியமர்த்தவும், பின்னர் அவர்களே வியாபார நிலையங்களை நடத்தவும் ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஒருவகையில் இது யாழ் மத்திய நிலையத்துக்கு போட்டியாகவும் அமையலாம். நல்ல பொருட்கள் இந்த சிங்கள, நகரில் கிடைத்தால் பிறகு என்ன ? தமிழர்கள் அங்கே சென்றுதான் பொருட்களை வாங்கவேண்டி இருக்கும். இப்படியானதொரு சூழ் நிலை தோன்றவுள்ளது. இந்த சிங்கள நகரத்தின் நுளைவாயிலில் பாரிய வளைவுத் தூபி ஒன்றை சிங்கள இராணுவம் கட்டி வருகிறது. இத்தூபியின் கட்டட வேலைகள் முடிவும் தறுவாயில் உள்ளதை நீங்கள் படத்தில் காணலாம். 

பகல் வேளையில், புல்டோசர் கொண்டு இராணுவம் தமிழர்களின் வீட்டை இடிக்கும் காட்சிகள் இரகசியமாக படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்க விரும்பினால் இங்கே அழுத்தவும்

Geen opmerkingen:

Een reactie posten