மன்னார்,திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியில் இருந்து இன்று சனிக்கிழமையும் மேலும் 3 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ள அதே வேளை சிறுவர்களின் பற்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.குறித்த பகுதியிலிருந்து கடந்த 20 ஆம் திகதியில் இருந்து இன்று சனிக்கிழமை வரைக்கும் மனித எலும்பு கூடுகள் 18 உம், மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இன்றும் காலை 8 மணிமுதல் மாலை 2.15 மணிவரைக்கும் மனித புதைகுழி தோண்டப்பட்ட போது 3மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இதே வேளை குறித்த புதை குழியினுள் இருந்து மனித பற்கள் சில மீட்கப்பட்டுள்ளதோடு குறித்த பற்கள் சுமார் 6 வயதுடைய சிறுவர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.புதைகுழி தோண்டும் பணி மீண்டும் எதிர்வரும் 6 ஆம் திகதி திங்கட்கிழமை தொடர்ந்து இடம் பெறமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டையோடுகளில் துவாரம்! இராணுவத் தடயப்பொருள்களும் சிக்கின!
மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட மண்டையோடுகளின் மேற்பகுதியில் துப்பாக்கி சூட்டு துவாரங்கள் இருந்தமை தெரியவந்துள்ளது. அத்துடன் இப்படுகொலையினை இலங்கை இராணுவமே நடத்தியிருந்தமைக்கான சில தடயப்பொருள்களும் புதை குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் நேற்று மீண்டும் முன்னெடுக்கப்பட்டன. இதன் போது மேலும் நான்கு எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன. ஏற்கனவே மீட்கப்பட்ட 11 எலும்புக் கூடுகளுடன் சேர்த்து இதுவரை 15 எலும்புக் கூடுகள் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது நான்கு எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டதுடன் அவற்றுடன் சில தடயப் பொருள்களும் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. நேற்று மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளின் மண்டடையோடுகள் சிலவற்றின் மேல் பகுதியில் துவாரங்கள் காணப்படுகின்றன. இந்தப் புதைகுழியில் மேலும் பல எலும்புக் கூடுகள் காணப்படலாம் என்ற நிலையில் அப்பகுதி அகலமாகத் தோண்டப்படவுள்ளது. புதைகுழியை தோண்டும் பணிகள் இன்றும் தொடர்கின்றது.
நேற்று மீட்கப்பட்ட மண்டையோடு ஒன்றினில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் சீருடை துணிபையொன்றினால் முகத்தினை மூடிக்கட்டியிருந்த தடயமும் பதுங்கு குழியினுள் நிற்க வைத்து சுட்டுபடுகொலை செய்யப்பட்ட தடயமும் மீட்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten