ஏனைய வீடுகளில் தமிழர்கள் வசித்து வந்தாலும், அதிகளவான வீடுகளில் இலங்கை இராணுவமே வசித்துவருவதாகவும் அதிலும் அவர்கள் "காயப்பட்ட இராணுவத்தினர்" என்ற பரபரப்புச் செய்தியும் வெளியாகியுள்ளது. அப்படி எனில், அவர்கள் 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போரில் பங்கேற்றவர்களாகத் தான் இருக்கவேண்டும். ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இந்த இராணுவத்தினருக்கு ஏன் லிபரா மோபைல் நிறுவனம் வீடுகளை வழங்கியுள்ளது ? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியே அவர்கள் குறித்த சில வீடுகளை ஆக்கிரமித்தால் கூட, லிபரா நிறுவனத்தால் அவர்களை வெளியேற்ற முடியும். இது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் ஆகும். இப்படி இருக்கும்போது லிபரா மோபைல் நிறுவனம் ஏன் இவ்வாறு செய்கிறது என்று பல தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக லிபரா மோபைல் நிறுவனம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். பல காலமாக இலங்கை இராணுவம் இவ்வாறு லிபரா குடியிருப்பில் வசித்து வருவதும் இதனை பாராமுகமாக லிபரா மோபைல் நிறுவனம் இருப்பதும் கண்டனத்துக்குரிய விடையம் ஆகும். குறித்த குடியிருப்பில், இருக்கும் சிங்கள இராணுவத்தினரே இரவு வேளைகளில் களவுகளில் ஈடுபடுவதாகவும் அவ்வூர் மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இதனை லிபரா மோபைல் நிறுவனம் ஏன் இதுவரை கண்டுகொள்ளவில்லை என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளதாக அவ்வூர் மக்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
Geen opmerkingen:
Een reactie posten