இலங்கையை குற்றவாளியாக்க இத்தாலிய அரச சார்பற்ற நிறுவனமொன்று முயற்சித்து வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக தீர்ப்பளிக்க்கப்பட உள்ளது.
70000 தமிழ் மக்களை படையினர் கொலை செய்ததாக தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் 22ம் திகதி காலை 10.00 மணிக்கு ஜெனீவாவில் இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட உள்ளது.
ஜெனீவா ஊடக மத்திய நிலையமொன்றில் இந்தத் தீப்பு அறிவிக்கப்பட உள்ளது,
இந்த தீர்ப்பு அளிக்கும் நிகழ்வில் செனல்4 ஊடகவியலாளர் கெலம் மக்ரே பங்கேற்ற உள்ளார்.
இத்தாலிய பொதுமக்கள் தீர்ப்பாயம் என இந்த அரச சார்பற்ற நிறுவனத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது,
48 மணித்தியாலங்கள் மட்டுமே இலங்கைக்கு எதிரான விசாரணைகள் நடத்தப்பட்டுள்ள சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பாயத்தின் தலைமை அதிகாரியாக முன்னாள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிப் பொதுச் செயலாளர் டெனிஸ் ஹெலிட் கடமையாற்றுகின்றார்.
Geen opmerkingen:
Een reactie posten