கே.பி சரணடையும்போது 8 பேரை சிக்கவைக்க முயற்சி செய்தார் !
பிரபாகரனின் மகளின் கல்வி சான்றிதழை ஆராயும் இலங்கை படையினர் !
14 January, 2014 by admin
சமீப காலமாக தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் மகள் தொடர்பாக இலங்கைப் படையினர் சில தகவல்களை திரட்டி வருவதாக கொழும்பில் இருந்து சில இரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. இதனை இவர்கள் ஏன் தற்போது மேற்கொள்கிறார்கள் என்பது தொடர்பாக எதனையும் அறிய முடியவில்லை என்று அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. தலைவர் பிரபாகரன் அவர்களின் பிள்ளைகளை கல்விக்காக வெளிநாடு கொண்டுசெல்ல(2004ம் ஆண்டளவில்) முற்பட்டதாக கூறப்படும் நபர் ஒருவரை, கடந்த சில தினத்திற்கு முன்னதாக இலங்கை புலனாய்வு கைதுசெய்திருந்தமையும் குறிப்பிடத்தகக விடையம் ஆகும். அவருக்கு என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை.
இதேவேளை தலைவரின் மகள் துவாரகா பிரபாகரன் மற்றும் சாள்ஸ் ஆகியோரின் சான்றிதழ்களை சமீபத்தில் இலங்கை இராணுவம் ஒரு இரகசியமான இடத்தில் இருந்து கைப்பற்றியதாக கூறப்படுகிறது. சில கல்விச் சான்றிதழ்களை அவர்கள் 2009ம் ஆண்டு கைப்பற்றியிருந்தார்கள். இருப்பினும் இது புதிதாக கைப்பற்றப்பட்ட சான்றிதழ்கள் என்று கூறப்படுகிறது. இதனூடாக இலங்கை இராணுவம் என்ன செய்ய முயல்கிறது என்பது யாருக்கும் இதுவரை தெரியவில்லை. இருப்பினும் துவாரகா சென்னையில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் கல்வி பயின்றதாகவும், பின்னர் அவர் அயர்லாந்து சென்றதாகவும் , கைப்பற்றியுள்ள சான்றிதழ்களூடாகத் தெரிவதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கொழும்பில் தனது நண்பர்கள் சிலருக்கு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
ஏற்கனவே கைப்பற்றப்பட்ட வீடியோவைப் பார்க்க இங்கே அழுத்தவும்.
http://uttv.tv/5.php

Geen opmerkingen:
Een reactie posten