தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 januari 2014

பிக்குகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சிங்களப் பொலிசார் !



சிங்கள ராவண சக்தி என்னும் அமைப்பினர், சில தினங்களுக்கு முன்னர் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். கொழும்பில் உள்ள இலங்கைப் பிரதமர் வீட்டின் முன்னதாகவே இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட பெளத்த பிக்குகள் பிரதமர் பதவி விலகவேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். பின்னர் அவர்கள் பிரதமருக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது ? என்பதனை பொலிசார் விசாரிக்கவேண்டும் எனவும் , கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். சில மாதங்களுக்கு முன்னர் பாக்கிஸ்தானில் இருந்து வந்த கொள்கலன் ஒன்றில் பெருமளவான போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதனை விடுவிக்குமாறும் அவற்றை தாம் பிறிதொரு பகுதிக்கு கொண்டு சென்று அழிக்க இருப்பதாகவும் பிரதமர் அலுவலகம் கடிதம் ஒன்றை எழுதியது.

இருப்பினும் மகிந்தரின் உத்தரவு இன்றி, தாம் அந்தக் கொள்கலனை தரமாட்டோம் என்று சுங்க அதிகாரிகள், பிரதமருக்கு நெருக்கமான பொலிசாரிடம் கூறிவிட்டார்கள். இதனால் சுங்க அதிகாரிகளுக்கும் பொலிசாருக்கும் இடையே முறுகல் நிலைதோன்றியது. இதனையடுத்து தமக்கு கிடைத்த கடிதத்தின் பிரதி ஒன்றை சுங்க அதிகாரிகள் மீடியாவுக்கு கசிய விட்டார்கள். இதனால் பெரும் பரபரப்பு தோன்றியது. பிரதமர் அலுவலகத்தில் வேலைபார்த்த அவரது செயலாளர் இதனால் பதவி விலகினார். அவரே இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டு, பிரதமர் குற்றமற்றவர் என்ற செய்திகள் பின்னர் வெளியாகியது. இருப்பினும் பிரதமருக்கும் இந்த போதைப் பொருள் கடத்தும் கும்பலுக்கும் சம்பந்தம் இருப்பதாக பிக்குகள் இன்னும் கூறிவருகிறார்கள்.

இதன் ஒரு அங்கமாகவே இப்போராட்டம் இடம்பெற்றது. ஆனால் எப்போது பிக்குகள் போதை பொருள் தொடர்பாக கூச்சலிட ஆரம்பித்தார்களோ அப்போது பிரதமர் அலுவலகத்தினுள் இருந்த சில பொலிசார் தடிகளுடன் வெளியே வந்து கூச்சலிட்ட பிக்குகளை பலமாகத் தாக்கியுள்ளார்கள். இதில் ஒரு பிக்குவின் மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டது. பொலிசாரின் இந்த அதிர்சி வைத்தியத்தால் ஆடிப்போனார்கள் ராவண சக்தி இயக்கத்தினர் என்று கூறப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten