தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 januari 2014

யாழ்ப்பாண, மன்னார் ஆயர்களின் முறைப்பாட்டுக்கு ஒப்புதல் வழங்க முடியாது!- கர்தினால் மல்கம் ரஞ்சித்!

இலங்கைப் படையினர் இறுதிப்போரின் போது கொத்துக்குண்டுகளையும் இரசாயன குண்டுகளையும் பயன்படுத்தியதாக யாழ்ப்பாண மற்றும் மன்னார் ஆயர்கள் வெளியிட்ட முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கொழும்பு ஆயர் வணக்கத்துக்குரிய கார்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார் 
இலங்கைப் படையினர் இறுதிப் போரின் போது கொத்துக் குண்டுகளையும் இரசாயன குண்டுகளையும் பயன்படுத்தினர் என்பதை சர்வதேச ரீதியில் விசாரணை செய்ய வேண்டும் என்று யாழ்ப்பாண மற்றும் மன்னார் ஆயர்கள் கோரியிருந்தனர்.
இந்தக் கோரிக்கை அண்மையில் இலங்கைக்கு சென்றிருந்த அமெரிக்காவின் போர்க்குற்றங்களுக்கான தூதர் ஸ்டீபன் ராப்பிடம் விடுக்கப்பட்டது.
இது தொடர்பில் இலங்கையின் ஆங்கில இதழ் ஒன்று கொழும்பு ஆயர் வணக்கத்துக்குரிய மல்கம் ரஞ்சித்திடம் வினவியது.
அதற்கு பதிலளித்த கொழும்பு ஆயர், யாழ்ப்பாண மற்றும் மன்னார் ஆயர்களின் இந்த முறைப்பாடு அவர்களின் சொந்த கருத்துக்களாகவே இருக்கும் என்று குறிப்பிட்டார்.
இதற்கு கத்தோலிக்க சபை தமது ஒப்புதலை வழங்காது என்று அவர் தெரிவித்தார்.
எனினும் இலங்கையின் அமரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில் இலங்கையில போர்க்குற்றங்களுக்கான கண்கண்ட சாட்சிகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten