பாலியல் பலாத்காரத்தால் கொல்லப்பட்ட இளம் ஆசிரியை !
21 April, 2011 by adminகடந்த வாரம் யாழ்ப்பாணம் சில்லாலைப்பகுதியில் மரணமடைந்த யாழ் இந்துக்கல்லூரி இளம் ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என பிரதேச பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக இருந்த வேளையில் தூக்கில் தொங்கிய நிலையில் இவரின் சடலம் மீட்கப்பட்டது என செய்திகள் வெளியாகியிருந்தது யாவரும் அறிந்ததே. 27வயதுடைய செல்வராசா அனுஷா என்ற இந்த இளம் ஆசிரியை மீது பாலியல் பலாத்காரம் புரியப்பட்டிருப்பதாகவும் இதனால் அவர் இறந்திருப்பதாகவும் யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேதபரிசோதனையில் தற்போது தெரியவந்துள்ளது.
இவரின் வீட்டிற்கு அருகில் இராணுவ காவல் அரண் உள்ளதாகவும், இக்கொலையுடன் இராணுவத்தினரே சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் யாழில் எவரும் வாய் திறக்கமுடியாத அளவு கட்டுப்பாடுகள் காணப்படுவதால், எவரும் முன் வந்து சாட்சியமளிக்க தயங்குவதாகவும் மேலும் அறியப்படுகிறது.

Geen opmerkingen:
Een reactie posten