தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 april 2011

பொதுமக்கள் இழப்புகள் குறித்துக் கவலைப்படாது தாக்குதல் நடாத்தும் நேட்டோ படையினர்

[ வியாழக்கிழமை, 07 ஏப்ரல் 2011, 11:35.06 மு.ப GMT ]
லிபியாவில் பொதுமக்களைப் பாதுகாக்க நேட்டோ தவறி விட்டதாக கிளர்ச்சியாளர்களின் தளபதி ஜெனரல் அப்துல் பத்தா யூனுஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
நேட்டோ படைகளின் தாக்குதல்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக சுட்டிக் காட்டியுள்ள அவர், அதற்கும் மேலாக கடாபியின் படைகள் பொதுமக்களைத் தாக்கும் போது அவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளிலும் காலம் தாழ்த்தியே செயற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தவிரவும் நேட்டோவின் விமானங்கள் லிபிய இலக்குகள் மீது மேற்கொள்ளும் தாக்குதலின் போது பொதுமக்களின் இழப்புகள் குறித்து கவலைப்படுவதில்லை என்று அவர் கடுமையான தொனியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பெங்காஸி நகரில் வைத்து செய்தியார்களைச் சந்தித்த போதே கிளர்ச்சித் தளபதி ஜெனரல் பத்தா மேற்கண்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

லிபியாவில் கிளர்ச்சி ஆரம்பமாகும் முன்னர் ஜெனரல் பத்தா யூனுஸ் கடாபியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர். தற்போது கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து கடாபிக்கு எதிரான போராட்டங்களை முன்னணியில் நின்று வழிநடாத்துகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 opmerkingen:

  1. கடாபி அதிகாரத்தில் நீடிக்க வேண்டும்: லிபிய அரசு
    [ செவ்வாய்க்கிழமை, 05 ஏப்ரல் 2011, 10:23.34 மு.ப GMT ]
    கர்னல் ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என லிபிய அரசு கூறுகிறது. புதிய ஈராக் அல்லது சோமாலியா போன்று உருவாகாமல் தடுப்பதற்கு கடாபி பதவியில் நீடிக்க வேண்டும் என அரசு கூறியது.
    லியியாவில் கடந்த 15ம் திகதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. கர்னல் கடாபியை ஆட்சியில் இருந்து அகற்ற கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலால் கடாபி ராணுவம் பலவீனம் அடைந்து வருகிறது.

    இந்நிலையில் அங்கு ஆட்சி மாற்றம் கொண்டுவர கடாபியின் இரு மகன்களும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். லிபியா இன்னொரு புதிய ஈராக் ஆகவும், புதிய சோமாலியா ஆகாமலும் இருக்க கடாபி ஆட்சியில் நீடிக்க வேண்டும் என லிபிய அரசு செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

    கடாபி ராணுவம் போராட்டக்காரர்களை தான் குறிவைக்கிறது. பொதுமக்களை தாக்க வேண்டும் என்பது துருப்பினரின் இலக்கு அல்ல என்று அவர் கூறினார். இதற்கிடையே லிபியத்தலைவர் கர்னல் கடாபி தலைநர் திரிபோலியில் பொதுமக்கள் முன்பாக தோன்றினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மிஸ்ரட்டா நகரில் இருந்து தப்பி ஓடி வந்தவர்கள் கூறுகையில்,"அப்பாவி பொது மக்களை ராணுவம் கொடுமைப்படுத்துகிறது" என்றனர்.

    BeantwoordenVerwijderen
  2. [ வியாழக்கிழமை, 07 ஏப்ரல் 2011, 11:35.06 மு.ப GMT ]