[ வெள்ளிக்கிழமை, 08 ஏப்ரல் 2011, 01:02.00 AM GMT ]
ரமேஸ் அவர்களை இராணுவத்தினர் விசாரணை செய்த காணொளி ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்திருந்தமை யாவரும் அறிந்ததே. மீண்டும் சில காணொளிகள் நேற்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளிவந்துள்ளது.
உங்களது சொந்தங்கள் உங்களிடமே உயிர்ப் பிச்சை தாருங்கள் என கதறி அழுவது கேட்காது போனதென்ன?
[ வெள்ளிக்கிழமை, 08 ஏப்ரல் 2011, 02:06.08 PM GMT ]
எமக்காகவும் எமது சுதந்திரத்திற்காகவும் வியர்வை சிந்தி இரத்தம் சிந்தி உழைத்த இவர்களையும் இவர்களது பிரச்சினைகளையும் ஊடகங்கள், சட்டத்தரணிகள் ஏன் சொந்தங்கள் உட்பட யாருமே கண்டு கொள்ளாதது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும்.
தமிழர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர்களது உயிருக்கு ஆபத்து என்பதை யாருக்கும் சொல்லி தெரிய தேவை இல்லை. இலங்கையில் தனது இன அழிப்பிற்கான போராட்டத்தில் ஓரளவு வெற்றி கொண்ட இலங்கை அரசு புலம் பெயர் நாடுகளில் தமிழர்களின் சுதந்திர போராட்டத்தை முறியடிக்க முடியாது திணறுகின்றது.
இதற்கு காரணம் புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற தமிழர்களின் செறிவுத் தன்மையாகும். எனவே தான் இலங்கையில் வசந்தம் நிலவுகின்றது, மக்கள் சுதந்திரமாக நடமாடக் கூடியதாக இருக்கிறது, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிவடைந்து விட்டது என்றெல்லாம் கூறிக் கொண்டு உலக நாடுகளுக்கு பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு அதன் மூலம் புலத்தில் உள்ள தமிழர்களை தனது இனவெறிப் பொறிக்குள் வரவழைத்து அழித்துவிட நினைக்கின்றது இலங்கை அரசு.
இது உலக நாடுகளுக்கு தெரிந்தாலும் அந்த நாடுகள் தங்களது நாடுகளின் சுயநலன்களுக்காக இணங்கவே செய்கின்றது. இதற்கு நாங்களும் காரணமாக உள்ளதையும் மறந்து விடக் கூடாது. இலங்கைக்கு பயணிப்பதும், அங்கு பிரச்சினை இல்லை என்று பிரச்சாரங்களை மேற் கொள்வதும், எமக்கு நடந்த கொடுமைகளை எல்லாம் மறந்து இலங்கை அரசிற்கு எதிரான செயற்பாடுகளை செய்யவோ அல்லது எம்மிடம் இருகின்ற ஆதாரங்களை உரிய முறையில் பயன்படுத்தாது விடுதலும் ஆகும்.
எவ்வாறாயினும் எமக்காக உழைத்து தேய்ந்து போன உறவுகள் இன்று உங்களிடம் கையேந்தி உயிர்ப் பிச்சை கேட்டு நிற்கின்றார்கள். இவர்களை நாட்டிற்கு திருப்பியனுப்பப்படுமிடத்து இவர்களுக்கு இலங்கை அரசினால் என்ன நடக்கும் என்பது கூடவா உங்களுக்கு தெரியவில்லை! “அழிக்கப்பட்ட உறவுகளுக்காக அழுகின்ற நாம் ஏன் இலங்கை அரசினால் கொல்லப்பட இருகின்ற உறவுகளுக்காக போராட முன்வரவில்லை"?
உறவுகளே! எங்களது இரத்த உறவுகள், உங்களது சொந்தங்கள் இன்று கதறி அழுகின்றன. தங்களுக்கு யாரும் இல்லையா என. எனவே உங்களால் முடிந்த அனைத்து வளங்களையும், ஆதாரங்களையும், அறிவினையும் பயன்படுத்தி அவர்களைக் காப்பாற்றுவதற்கு முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இதற்காக உடனடியாக உங்களுக்கு தெரிந்த சட்டவியலாளர்கள், நிறுவனங்கள், தமிழர் அமைப்புகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் நாடி இவர்களது உயிர்களுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
பிரித்தானியாவில் இருந்து றொபேட்

Geen opmerkingen:
Een reactie posten