video´s |
26 Apr 2011 |
பான் கீ மூன் - உலகத்தமிழர் பேரவை உறுப்பினர் சந்திப்பு! அரசு விசனம் |
உலகத்தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினர் சுரேன் சுரேந்திரன் நியூயோர்க் சென்றிருந்த போது ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் மேற்கொண்ட சந்திப்பு தொடர்பில் இலங்கை அரசு விசனம் அடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எந்தவொரு அரசையும் சாராத உறுப்பினர் ஒருவர் ஐ.நாவின் செயலாளர் நாயகத்தை சந்தித்தமை தொடர்பில் ஆச்சரியம் தெரிவித்துள்ளது. அத்துடன் பான் கீ மூனுடனான இந்தச் சந்திப்பின் பின்னணியில் சக்திவாய்ந்த ஒரு நாடு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு அறிக்கையைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இலங்கைக்கு எதிரான பரப்புரைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். கடந்த வாரம் முழுவதும், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் 4 செய்தி நிறுவனம், அல்ஜசீரா செய்தி நிறுவனம் மற்றும் இந்திய ருடே நிறுவனத்தின் தொலைக்காட்சி நிறுவனம் என்பன இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தன. இதனிடையே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசுடன் நடைபெற்றுவரும் பேச்சுக்கள் தொடர்பில் அனைத்துலக அமைப்புக்களுடன் பேச்சுக்களை மேற்கொள்வதற்கே அவர்கள் சிங்கப்பூர் சென்றதாக தெரிவிக்கப்படுவதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு கடந்த தமீழீழ அரசின் பிரதிநிதிகள் எவரையும் நாம் சந்திக்கவில்லை. அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெறும் பேச்சுக்கள் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கிலேயே பங்கு பற்றச் சென்றிருந்தோம் என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது |
25 Apr 2011 |
Geen opmerkingen:
Een reactie posten