18 April, 2011 by admin
இறுதிக்கட்ட போரில், காயப்பட்டு குற்றுயிரும் குலையுமாக இருந்த பெண்போராளிகள் சிலரது தலையை வெட்டி இராணுவத்தினர் பல கொடுமைகளைப் புரிந்துள்ளதாக தற்போது கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த காரணத்தால் அவ்விடத்தில் இருந்து தப்பிச் செல்ல முடியாத நிலையில் இருந்த பெண்போராளிகளின் தலைகளை வெட்டியும், அவர்கள் பிறப்பு உறுப்புகளில் துப்பாக்கியால் சுட்டும் கொலைசெய்துள்ளது இலங்கை இராணுவம். தாம் காயம் அடைந்தாலும் இலங்கை இராணுவத்தின் கைகளில் சிக்கக்கூடாது என்பதற்காக அவர்களில் சிலர் சயனைட் வில்லைகளைக் கடித்துள்ளனர். இருப்பினும் நாள்பட்ட இந்த வில்லைகள் சில பெண்போராளிகளின் உயிரைக் குடிக்கவில்லை.
குற்றுயிரும் குலையுமாக இருந்த பெண்போராளிகளை மானபந்தப்படுத்தி, அவர்களின் உடைகளைக் களைந்து, அவர்களில் சிலரை பாலியல் வல்லுறவிற்கும் உள்ளாகியுள்ளது இலங்கை இராணுவம். போர் நெறிமுறைகளை மீறி, காட்டேரித் தனமாக மனித இனமே வெட்கி நாணும் வகையில், ஈனச் செயல்களில் ஈடுபட்டுள்ளது இலங்கை இராணுவம். போரில் காயமடைந்த பெண்போராளிகளை கட்டாயம் காப்பாற்றவேண்டும் என்ற நியதி இலங்கை இராணுவத்துக்கு இல்லை. ஆனால் அவர்கள் உயிருக்குப் போராடும் நிலையிலும் சித்திரவதைகளைச் செய்து, பாலியல் பலாத்காரம் செய்து கொண்றுள்ள விடையெமே பாரிய போர்குற்றச் செயல்களாக பார்க்கப்படுகிறது.
தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள், இறப்பதற்கு முன் சில பெண்போராளிகள் எவ்வகையான துண்பத்துக்கு உள்ளாகி இறந்துள்ளனர் என்பதனை தெள்ளத்தெளிவாகக் காண்பிக்கிறது. இலங்கை இராணுவத்தால் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரிய போர்குற்றங்களில் இதுவும் ஒன்றாகும். இத்தோடு மேலதிக சில ஆதாரங்களை நாம் மனித உரிமை அமைப்புகளுக்கும், மற்றும் ஐ.நா விற்கும் அனுப்பவுள்ளோம். தொடர்ந்தும் பல ஆதாரங்களைத் திரட்டி வரும் அதிர்வு, இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட போர் குற்ற மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரவுள்ளது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறது.

Geen opmerkingen:
Een reactie posten