தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 19 april 2011

சேர்பியாவை ஒத்த படுகொலைகளே இலங்கையில் அரங்கேறின! சனல் 4

 (வீடியோ இணைப்பு)
ஷேர்பினிக இனத்தவரின் படுகொலை போலவே ஈழத்தமிழர் மீதும் நிகழ்ந்த படுகொலை - சனல் 4
புதிய ஆதாரங்களுடன் சனல் 4 புதிய காணொளி வெளியீடு
Sri Lanka 'war crimes' is 'Srebrenica moment' - Channel 4 News
Channel 4 states, no records about 100,000 and more Vanni people
சேர்பியாவில் நிகழ்ந்ததைப் போன்ற படுகொலைகள் இலங்கையில் இடம்பெற்றிருப்பதாக ஐக்கியநாடுகள் சபையின் முன்னாள் பேச்சாளரான கோர்டன் வைஸ் சனல் 4 தொலைக்காட்சியில் இன்று இடம்பெற்ற செய்தி நேரத்தில் கருத்துத் தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார்.


இன்றைய செய்தி நேரத்தில் கோடன் வைஸ் தெரிவித்துள்ள முக்கியமான விடயங்கள் வருமாறு,


பொஸ்னிய தேசத்தில் சேர்பிய இனத்தவர்கள் எவ்வாறு வகைதொகையின்றிக் கொல்லப்பட்டார்களோ அதே போல இலங்கையிலும் பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் வகைதொகையின்றிக் கொல்லப்பட்டார்கள்.


அந்தப் பகுதிகளில் இடம்பெற்ற கொலைகளை யாரும் பார்க்கக் கூடாது என்று இலங்கை அரசு முன்னரே திட்டமிட்டிருந்தது.

சனல் 4 செய்தியாளரால் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வியொன்றுக்குப் பதிலளித்த கோடன் வைஸ்,


லிபிய விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்ட ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் போர் இடம்பெற்ற வேளை பாராமுகமாக இருந்தது ஏன்?


இந்தியாவும் சீனாவும் ஒன்று சேர்ந்தே இலங்கையைக் காப்பாற்றியது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இறந்தமைக்கு இந்த இரண்டு நாடுகளுமே பதில் கூற வேண்டும்.

மேலும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒரு போர்க்குற்றவாளி என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஐ.நாவின் முன்னாள் பேச்சாளரான கோடன் வைஸ்.

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்தே தமிழ் மக்களுக்காக வலுவாக உண்மையான கருத்துக்களை நேர்மையுடன் வெளியிட்டு வரும் சனல் 4 தொலைக்காட்சியினை உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் என்றுமே மறக்க மாட்டார்கள்.

சனல் 4 தொலைக்காட்சியில் இலங்கை தொடர்பாக வெளியிட்டு வரும் துல்லியமான கருத்துக்கள் தமிழ் மக்களைக் கொன்றொளித்த அதற்குத் துணை போன அரச இராணுவ உயர்மட்டங்களை கிலியில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சேர்பியாவில் இடம்பெற்ற படுகொலைகளை கீழே உள்ள காணொளிகள் மூலம் பாருங்கள்..
18 Apr 2011

1 opmerking:

  1. http://news.lankasri.com/view.php?22uIBZ303VjQ64e2GGpDcb3D92gdd3M294bc2XpGce40AQjd02eBLca2,
    http://www.lankasrinews.net/view.php?22BmSac3CA34eKY5303lOIdd2Old20L5Y3e44MCca2mB52,
    http://www.lankasrinews.net/view.php?22BmSac2CA44eKY5303lOIdd2Ol120L5Y3e44MCca2mBV2

    BeantwoordenVerwijderen