தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 april 2011

சிறீலங்காவின் போர்க்குற்றங்களை மக்கள் அறியவேண்டும்:சனல் 4

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்களின் மிகவும் கோரமான காட்சிகளை சனல் 4 செய்தி நிறுவனம் ஒளிபரப்பவுள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட த கார்டியன் நாளோடு நேற்று முன்தினம் (26) தெரிவித்துள்ளது.


அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்களில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் மிகவும் மோசமான காட்சிகள் அடங்கிய காணொளிகளை சனல் 4 செய்தி நிறுவனம் ஒளிபரப்பவுள்ளது.

குறிப்பிட்ட காணொளி தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, முன் குறிப்பு இடப்பட்டே அவை ஒளிபரப்பப்படவுள்ளதாக சனல் 4 செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜோன் ஸ்னோ என்பவர் அதனை தயாரித்துள்ளார்.

போரில் தமிழ் மக்களை சிறீலங்கா படையினர் கோரமாக படுகொலை செய்துள்ளனர். அதனை நேரில் கண்டவர்களின் ஆதாரங்களையும், புகைப்படங்களையும், காணொளிகளையும் இணைந்து இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதன் இயக்குனர் கலோம் மகே தெரிவித்துள்ளார்.

சாட்சிகள் அற்ற போரை நடத்தவே சிறீலங்கா அரசு விரும்பியிருந்தது. ஐ.நா அதிகாரிகளையும் வெளியேற்றி, ஊடகவியலாளர்களுக்கும் தடை விதித்திருந்தது. ஆனால் அதி நவீன தொழில்நுட்பங்களான செல்லிடத்தொலைபேசிகள், செய்மதிப் படங்கள் மூலம் அவர்களின் குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களை மக்கள் அறியவேண்டும். அதனை பார்க்கும் மக்கள் என்ன நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கட்டும் என சனல் 4 நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளர் டொறொதி பைரன் தெரிவித்துள்ளார்.

நாம் மிகவும் சிரமப்பட்டு, அக்கறையுடன் தயாரித்தே அதனை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
28 Apr 2011

1 opmerking: