01 April, 2011 by admin
அந்தக்கடைக்குள் ஓடியுள்ளனர். அங்கே கடை உரிமையாளரின் துரத்துச் சொந்தக்காரரான துஷாவின் தாயார், துஷா, 12 வயது அண்ணா மற்றும் அவரது 3 வயது தங்கை ஆகியோர் இருந்திருக்கின்றனர்.
திடீரென உள்ளே வந்த அந்த 2 இளைஞர்களுடன் வெளியே இருந்துவந்த 3 இளைஞர்கள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கண்டு பயந்த துஷா மறைவான ஒரு இடத்தில் தன்னை மறைத்து பதுங்கியிருந்திருக்கிறார். கைகலப்பில் ஈடுபட்ட 3 இளைஞர்களும் கடைக்கு வெளியே சென்று துப்பாக்கி ஒன்றின் மூலம் கடைக்குள் இருக்கும் அவ்விரு இளைஞரை நோக்கிச் சுட்டுள்ளனர். அவர்கள் பதுங்கிய இடத்தை நோக்கிச் சுடப்பட்ட தோட்டா துஷாவின் நெஞ்சில் பாய்ந்துள்ளது. மற்றைய தோட்டா கடை உரிமையாளரின் முகத்தை தாக்கியுள்ளது. துஷாவுக்கு இரவு பகலாக உயிர்காக்கும், சுமார் 3 சத்திர சிகிச்சைகள் கடந்த 3 நாட்களாக வைத்தியர்கள் மேற்கொள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர்கள், வேற்றினத்தினர் என்றும் அவர்கள் தமிழர்கள் அல்ல எனவும் பொலிசார் அதிர்வு இணையத்துக்கு தெரிவித்துள்ளனர். குற்றவாளியைக் கண்டு பிடிக்க உதவுவோருக்கு �50,000 பவுண்டுகள் சன்மானமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கிடைக்கப்பெற்ற செய்திகளின் அடிப்படையில் 19 வயது இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை நோக்கியே துப்பாகிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிசார் சந்தேகப்படுகின்றனர். இதுவரை பிரித்தானியாவில் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான சிறுவர்களில் துஷாவே மிகவும் வயது குறைந்த சிறுமி என பொலிசாரும் ஊடகங்களும் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் வசிக்கும் தமிழர்கள் குற்றவாளிகளைப் பிடிக்க நிச்சயம் உதவிசெய்வார்கள் என தான் நம்புவதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர். அதனிடையே பிரித்தானியாவில் இருக்கும் தமிழர்கள் இவ்விடையத்தை சும்மா விடப்போவது இல்லை என்று, டெய்லி ஸ்ரார் செய்திவெளியிட்டு உள்ளது. தமிழர்கள் நிச்சயம் இதனைக் கண்டுபிடிப்பார்கள் என்ற தொணியிலும் அது அமைந்துள்ளது. பாரிய சக்திமிக்க சமூகமாக இருக்கும் பிரித்தானியத் தமிழர்கள் அனைவரும் ஒன்றினைந்து இதற்கு முகம்கொடுக்கவேண்டி உள்ளது எனவும் குறிப்பிடப்படுகிறது.
இலங்கையில் இருக்கும்போது சிங்களவர்கள் சுட்டார்கள், தஞ்சமடைந்த நாட்டில் வேற்றின மக்கள் சுடுகிறார்கள் ! என தமிழ் மக்கள் சலிப்படைந்துள்ளதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் உள்ள சீக்கிய மதத்தவர், மற்றும் குஜராத்தி இனத்தவர்போல இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகிறது. 5 வயதுச் சிறுமி துஷா விரைவில் உடல் நலம்தேறி மீண்டு எழ அதிர்வு குழுமம் இறைவனைப் பிரார்த்திக்கிறது.
Geen opmerkingen:
Een reactie posten