220 பக்கம் கொண்ட ஐ.நா அறிக்கை கசிந்தது:
15 April, 2011 by adminஇலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற வேளை இரு தரப்பினரும் போர்குற்றங்களில் ஈடுபட்டதாக சுட்டிக்காட்டும் அவ்வறிக்கையானது, அரச தரப்பு பாரிய போர்குற்றங்களில் ஈடுபட்டதற்கான சான்றுகள் இருப்பதாக தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளதாம். அங்கு நடைபெற்ற போர் குற்றத்தை விசாரிக்க சர்வதேச சுயாதீன ஆணைகுழு ஒன்றை நியமிக்கவேண்டும் என ஐ.நா நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த அறிக்கையின் பெரும்பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கு பாதகமான விடயங்களே காணப்படுவதாகவும் இது இலங்கை அரசாங்கத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இவ்வறிக்கையை வாசித்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஐ நா பொதுச்செயலாளருக்கு தெரிவித்த எந்த விடயமும் நிபுணர்குழுவால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் ஐ.நாவுக்கு விஜயம் மேற்கொண்ட, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், ஐ.நாவிற்கான பிரதிநிதி பாலித கோஹனே, ஐநாவிற்கான இலங்கையின் பிரதித் தூதர் மேஜர் ஜெனரல் சவிந்திர டி சில்வா, மற்றும் வெளியுறவுச் செயலாளர் ரொமேஸ் ஜயசிங்கா ஆகியோர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர்கள் சொன்ன எந்த ஒரு விடையத்தையும் நிபுணர்கள் குழு கருத்தில் கொள்ளவில்லை என அறியப்படுகிறது.
மொத்தமாகச் சொல்லப்போனால் இலங்கைக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் இவ்வறிக்கை அமைந்துள்ளது. இவ்வறிக்கை தொடர்பாக சற்று மெளனம் காப்பது நல்லது என இலங்கை அரசு கருதுவதாகவும், எது நடந்தாலும் தாம் அதனைப் பற்றி அலட்டிக்கொள்ளாது இருப்போம் என அவர்கள் முடிவெடுத்துள்ளதாகவும் அரசவட்டாரங்களில் பேசப்படுவதாக அதிர்வின் செய்தியாளர் தெரிவித்தார்.
இறுதி முடிவாக இந்த விசாரணை சபை நம்பிக்கையான சாட்சியங்களின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என ஐந்து வகை குற்றங்களை முன் வைக்கிறது.
அவையாவன
அ) கண்மூடித்தனமான செல் வீச்சுக்களின் மூலம் பொதுமக்களை கொன்று குவித்தது.
ஆ) வைத்தியசாலைகளிற்கும் மனித நலசார் காப்பகங்களிற்கும் செல் வீசியது.
இ)மனிதாபிமான உதவிகளை மறுத்தது.
ஈ) மனித உரிமை மீறல்களை சரணடைந்த விடுதலைப்புலிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் மீது பிரயோகித்தது.
உ) ஊடகங்கள் மீதும், அரசு மீது கண்டனம் தெரிவிப்போர் மீதும் கண்டனம் தெரிவிப்பது.
விசாரணைக் குழு விடுதலைப்புலிகள் கீழ்க்காணும் போர் குற்றங்களைப் புரிந்துள்ளார்கள் என்றும் கூறியுள்ளது.
அ) மனித கேடயமாக மக்களைப் பாவித்தது.
ஆ) அரசாங்கக் கட்டுப்பாட்டு பகுதிகள் சென்ற பொதுமக்களை கொன்றது.
இ) இராணுவத்தளபாடங்களை மக்கள் இருந்த இடங்களில் பாவித்தது.
ஈ) சிறுவர்களைப் பலவந்தமாக படைகளில் இணைத்தது.
உ) கட்டாயமாக தொழிலாற்றப் மக்களைப் பணித்தது.
ஊ) பொதுமக்களை தற்கொலைத் தாக்குதல்களின் மூலம் கொன்றது.
இவையே இரு தரப்பின் மீதான குற்றச்சாட்டுகளாகும்.
இதற்கான பரிந்துரைகளாக, மேற்படி குற்றச்சாட்டுக்கள் நம்பகத்தன்மையானவை என்பதை ஆணைக்குழு ஏற்பதால்,
- இந்த யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த உண்மையான தூய நோக்கோடுடனான விசாரணையொன்றை ஆரம்பிக்க வேண்டும்
- ஐ.நா.செயலாளர் நாயகம் சுயாதீன விசாரணைக்குழு நடுவம் ஒன்றை மேற்படி விசாரணையை மேற்பார்வை செய்ய அமைக்கவேண்டும்.
விசாரணை காத்திரமாகப் போகின்றதா என்பதை ஐ.நா குழு கவனிக்க வேண்டும். வன்முறைகள் சம்பவமான தனிப்பட்ட விசாரணையைத் தொடங்குதல் என்பவற்றோடு, எவ்வாறு இந்த விசாரணையை விரிவுபடுத்தலாம் எவ்வாறான விடயங்கள் தொகுக்கப்பட வேண்டும் போன்றனவும் அறிமுகப்படுத்தன.
Geen opmerkingen:
Een reactie posten