இரு பஸ்களின் மூலம் இவ்வாறு இரவு விசேட அதிரடிப்படையினர் கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளனர்.
பெருமளவிலான பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு இந்த சுற்றிவளைப்பின்போது இதுவரையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, உரிய ஆவணங்கள் இல்லை என ஒரு சில வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் வீடு வீடாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
வலிகாமம் தெற்கு, ஏழாலை, குப்பிளான், மயிலங்காடு, புன்னாலைக்கட்டுவன், ஈவினை உள்ளிட்ட பல்வேறிடங்களிலும் இன்று காலை முதல் துப்பாக்கி ஏந்திய விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகத்துக்கிடமான முறையில் வீதியால் செல்லும் பொதுமக்கள் அனைவரும் இடை வழிமறிக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.இதன் காரணமாக மக்கள் மத்தியில் பதற்ற நிலை தோன்றியுள்ளது.
அடையாள அட்டை, வாகன அனுமதிப்பத்திரம் என்பன பரிசோதிக்கப்படுகின்றன. அத்துடன் பொலிஸார், விசேடஅதிரடிப்படையினர் இணைந்து ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் பகுதியில் கோப்பாய்ப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் இருவர் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகிப்படுகாயமடைந்தனர்.
இதனையடுத்துக் கடந்த திங்கட்கிழமை யாழ். வருகை தந்தஇலங்கையின் பொலிஸ்மா அதிபர் வடமாகாணத்தில் சட்டவிரோத வன்முறை சம்பவங்கள், வன்முறைகள் கையை மீறிப் போய்விட்டமையால் இவற்றைக் கட்டுப்படுத்த முப்படையினரையும் களத்தில் இறக்கி விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால், குறித்த செயற்பாடு வடக்கு மாகாணத்தில் இராணுவமயப்படுத்தலை நியாயமாக்கும் செயற்பாடு எனத் தமிழ் அரசியல் வாதிகள் குற்றம் சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/special/01/154217
Geen opmerkingen:
Een reactie posten