சிரியா- துருக்கி எல்லைப்பகுதியில் சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயன்ற சிலரை துருக்கி வீரர்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர், இது தொடர்பான வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
குறித்த வீடியோவில் நபர் ஒருவர், மீண்டும் துருக்கி பக்கம் வருவீர்களா, சத்தம் போடாதே என்று கூறி காலால் உதைக்கின்றார்.
தொடர்ந்து நீங்கள் கடத்தல்காரர்களா? இங்கு என்ன கொண்டு வந்தீர்கள்? என கேட்டுக்கொண்டே மீண்டும் அடிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தாக்கிய வீரர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாக துருக்கி ராணுவம் அறிவித்துள்ளது.
மேலும் இச்சம்பவத்தால் பாதிப்புக்குள்ளான அகதிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கடந்த வாரம் துருக்கி எல்லையோர காவல் படையினர் சிரிய அகதிகளை பெண்களின் உள்ளாடையை அணியும்படி வற்புறுத்தியது குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/othercountries/03/130093




Geen opmerkingen:
Een reactie posten