இந்நிலையில், குறித்த உணவகங்களுக்கு சிங்களத்தில் பெயர் சூட்டுமாறு மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அம்மாச்சி உணவகம் என்ற பெயரில் பாரம்பரிய உணவகங்கள் திறக்கப்பட்டு, மிகப் பிரபலமாகியுள்ளன.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரிலும் இதுபோன்ற உணவகங்களைத் திறப்பதற்கு மத்திய அரசாங்கத்திடம் நிதி கோரப்பட்டது.
எனினும் நிதி வழங்க வேண்டுமாக இருந்தால் குறித்த உணவங்களுக்கு சிங்கள பெயர் வைக்க செல்லி அழுத்தம் கொடுக்கின்றார்கள்.
இந்த உணவகங்களுக்கு சிங்களப் பெயர்தான் வைக்க வேண்டும் என்று, நிதி தரும்போதே சொல்லியிருந்தால் நாங்கள் அதனை வேண்டாம் என்று சொல்லியிருப்போம்.
நன்மை செய்வதாக கூறியே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழரின் பாரம்பரிய உணவகத்திற்கு சிங்களச் சொல் தேவையில்லை. இப்படித் தான் எங்களின் தனித்துவத்தை அழிக்கிறார்கள் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten