தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 15 augustus 2017

சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருக்கும் ஆபத்து

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வோரை தடுப்பதற்கான நடவடிக்கையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
செல்லுபடியான கடவுச்சீட்டு மற்றும் விசா இன்றி மக்கள் சட்டவிரோத விமான பயணங்களை மேற்கொள்வதன் ஊடாக ஒவ்வொரு ஆண்டும் பாரியளவான தண்டப் பணத்தை செலுத்த வேண்டி ஏற்படுகின்றது.
இதனால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இவ்வாறான சட்டவிரோதமாக பயணங்கள் மேற்கொள்வதை நிறுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளுக்கு வெற்றி கிடைத்துள்ளன.
இதற்காக ஆவணங்களை பரிசோதனை செய்ய விஷேட பயிற்சி பெற்ற அலுவலர்கள் இலங்கை விமான நிறுவனத்தில் இருக்கின்றனர்.
போலி பயண ஆவணங்களை கண்டறிவதற்காக வெளிநாட்டு தூதரகங்கள் ஊடாக விஷேட பயிற்சிகள் பெறப்பட்டுள்ளதாகவும், இதனால் சட்டவிரோதமாக செல்ல நினைப்போருக்கு இனி சந்தர்ப்பம் கிடைக்காது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை விமான நிறுவனத்தின் பணியாளர்கள், பொலிஸார், சுங்கப் பிரிவு மற்றும் குடிவரவு, குடியகல்வு பிரிவினர் என அனைவரும் இணைந்து சட்டவிரோத பயணிகளை கண்டறிவதற்காக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/transport/01/155322

Geen opmerkingen:

Een reactie posten