தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 31 augustus 2017

ஜகத் ஜயசூரியவை கைது செய்ய சிவப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டும்! பிரித்தானியா விடுத்த கோரிக்கை

பிரேசிலுக்கான இலங்கை தூதுவர் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டு வழக்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்ய வேண்டும் என பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது.
அந்நாட்டு நாடாளுமன்றின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான, போல் ஸ்கலி இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "பிரேசிலுக்கான இலங்கை தூதுவர் ஜகத் ஜயசூரியவை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும்.
அத்துடன், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டு வழக்கை சர்வதேச நீதிமன்றில் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்நிலையில், இராஜதந்திர விலக்குரிமைக்குப் பின்னால் மறைந்திருப்பதோ, சட்ட சவாலை எதிர்கொள்வதற்கு முன்னர் தப்பியோடுவதோ, போதுமானதல்ல என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது உயிரிழந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
ஆகவே, இரண்டு தரப்புகளுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய, திறந்த வெளிப்படையான நீதி செயல்முறைகளை இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக International Truth and Justice Project (ITJP) என்ற அமைப்பு, தென் அமெரிக்காவில் உள்ள மனித உரிமை அமைப்பு ஒன்றின் ஊடாக, பிரேசிலில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/politics/01/156992

Geen opmerkingen:

Een reactie posten