ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறவுள்ள நிலையில், பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டவர்கள் குடியுரிமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே, கடந்த 27ஆம் திகதி உள்துறை அமைச்சு Jay Visva Solicitorsக்கு அனுப்பிய மின்னஞ்சலில் பின்வரும் தகவலை தெரிவித்துள்ளது.
- நிரந்திர வதிவுரிமை பத்திரம் பெற்றவர்கள் கல்வி, சுகாதாரம், உதவிப்பணம், ஓய்வூதியம் மற்றும் சமூக வீட்டு வசதி போன்றவற்றில் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்களுக்கு இணையாக கருதப்படுவார்கள்.
- சட்ட ரீதியாக வசிக்கும் ஐரோப்பிய குடிமக்கள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் பொழுது பிரித்தானியாவை விட்டு போகவேண்டி இருக்காது. தங்களது வதிவுரிமையை நெறிபடுத்திக்கொள்ள மேலதிகமாக இரண்டு ஆண்டுகள் கொடுக்கப்படும்.
- இலகுவான விண்ணப்பம் அறிமுகப்படுத்தப்படும். ஏற்கனவே நிரந்திர வதிவுரிமை பெற்றவர்களும் இதில் பதிவுசெய்து கொள்ளவேண்டும். இந்த வசதிகள் 2018 ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வருகின்றது.
மேலே குறிப்பிட்ட விண்ணப்பங்களை நீங்கள் இப்பொழுது செய்யவேண்டிய கட்டாயம் இல்லை. இந்த மின்னஞ்சலில், மேலும் அரசாங்கம் கூறியதாவது உள்துறை அமைச்சு குடிவரவு ஆலோசனை வாரியத்திடம் மேலதிக ஆலோசனையை நாடியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலதிகமாக மின்னஞ்சலை வாசிப்பதற்கு கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்.
தகவல் Jay Visva Solicitors.
மேலதிக தெடர்பு எண் (+44) 020 8573 6673
http://www.tamilwin.com/uk/01/153755
Geen opmerkingen:
Een reactie posten