தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 31 juli 2017

கனடாவில் நான்கு இலங்கையர்களுக்கு முக்கிய தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

கனடாவுக்கு புலம்பெயர ஆட்களை கூட்டி வந்து அதன் மூலம் பணம் சம்பாதித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நான்கு இலங்கையர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இலங்கையை சேர்ந்த Jeyachandran Kanagarajah (32), Hamalraj Handasamy (39), Francis Anthonimuthu Appulonappa, Vignarajah Thevarajah ஆகிய நால்வரும் கடந்த 2009ல் கனடாவுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.
இவர்களுடன் 72 இலங்கையர்களும் கப்பல் மூலம் கனடா வந்தனர். இந்நிலையில் Jeyachandran, Hamalraj, Francis, Vignarajah ஆகிய நால்வரும் பணத்தை பெற்று கொண்டு 72 பேரை கனடாவுக்கு சட்ட விரோதமாக புலம் பெயர அழைத்து வந்ததாகவும், இது மனித கடத்தல் எனவும் கூறி British Columbia நீதிமன்றத்தில் நான்கு பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.
பல ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் நான்கு இலங்கையர்களும் குற்றமற்றவர்கள் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
நீதிபதி Arne Silverman கூறுகையில், நால்வரும் பணம் மற்றும் இதர லாபங்களை பெற்று மற்றவர்களை இங்கு அழைத்து வந்தார்கள் என்ற விடயம் நம்பும்படியாக இல்லை, இதற்கு ஆதாரங்களும் இல்லை.
எல்லோரையும் போல இவர்களும் புலம்பெயர இங்கு வந்தவர்கள் தான். பசிபிக் பெருங்கடலில் கப்பல் மூலம் 45 நாட்கள் பயணத்தில் அவர்கள் அடைக்கலம் தேடி இங்கு வந்துள்ளார்கள் என கூறியுள்ளார்.
நால்வர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி Arne தீர்ப்பளித்துள்ளார்.
http://www.canadamirror.com/canada/04/134033

Geen opmerkingen:

Een reactie posten