பிரித்தானியா அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் 150க்கும் மேற்பட்டோரின் குடியுரிமை பறிக்கப்படுகிறது. மட்டுமின்றி சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று பயங்கரவாதிகளை திருமணம் செய்துள்ள பிரித்தானிய பெண்களும் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பேசிய பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி ஒருவர், இனிமேல் பிரித்தானியாவுக்கு திரும்ப முடியாதவர்களின் பட்டியல் அதிகரித்துள்ளது அதிர்ச்சி தருவதாக உள்ளது,
ஆனால் எங்களின் முதன்மையான முன்னுரிமை என்பது குறித்த நபர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும் என்பதே என்றார்.
இந்த ஆண்டு மட்டும் சந்தேகத்துக்குரிய பிரித்தானியர்கள் 40 பேரின் கடவுச்சீட்டுகளை முடக்கியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி இரட்டைக் குடியுரிமை கொண்ட நபர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும் எனவும் தெளிவு படுத்தியுள்ளனர். சிரியா உள்ளிட்ட நடுகளில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
இதனையடுத்தே பிரித்தானிய பயங்கரவாதிகள் உள்ளிட்ட குற்றவாளிகளின் குடியுரிமையை பறிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
http://news.lankasri.com/uk/03/129760
Geen opmerkingen:
Een reactie posten