அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரி சென்ற ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட 1250 பேர் நவுறு மற்றும் மனுஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த அனைவரையும், தமது நாட்டில் குடியேற்றுவதற்கு அமெரிக்கா இணக்கம் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இது குறித்த விசாரணைகளையும் அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.
எனினும், அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 240 ஈழ அகதிகளில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவில் குடியேறும் வாய்ப்பை இழக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதலையடுத்து கொண்டு வரப்பட்ட தீவிரவாத சட்டத்தினால் குறித்த ஈழ அகதிகள் குடியேறுவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும் என கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பெரும்பாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. இதன்போது அந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் விடுதலைப் புலிகளுக்கு பொருள் உதவிகளை வழங்கியுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குடியேற்றக் கொள்கை தொடர்பான வாசிங்டன் நிறுவனத்தின் இணை நிறுவுனரான, கத்தே நியூலன்ட், இந்த பொருள் ஆதரவு என்ற விடயம் மிகவும் பரந்துபட்ட ஒன்று என விபரித்துள்ளார்.
பணம், உணவு, இருப்பிடம், பயிற்சி உள்ளிட்ட உதவிகளும் இதில் உள்ளடக்கப்படும் என கத்தே நியூலன்ட் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகளில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவில் குடியேறும் வாய்ப்பை இழக்க நேரிடும் என ABC ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten