தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 17 juli 2017

லண்டனில் தமிழ் குடும்பத்தினர் மீது வீடு புகுந்து தாக்குதல்: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பிரித்தானியாவின் Stanmore பகுதியில் குடியிருக்கும் தமிழ் குடும்பம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள Stanmore பகுதியில் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தன்று குறித்த குடியிருப்பின் கதவை தட்டிய மர்ம நபர்கள் இருவர், அந்த குடியிருப்பின் கதவை திறந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை துப்பாக்கியை காட்டி பயமுறுத்தி திறந்த வீட்டினுள் வலுக்கட்டாயமாக புகுந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி அந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் வாசல் பக்கம் என்ன களேபரம் என பார்க்கச் சென்ற பாதிக்கப்பட்டவரின் தாயார், நடப்பவற்றைக் கண்டு பயத்தில் அலறியுள்ளார்.
இதனையடுத்து அந்த கும்பல் இவரையும் தாக்கியுள்ளது. தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தலைமறைவானதாக கூறப்படுகிறது.
மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பமானது தமிழர்கள் என தெரிய வந்துள்ளது. இதனிடையே காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவமானது கடந்த யூன் மாதம் 15 ஆம் திகதி நடந்துள்ளது. அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய இருவரும் கறுப்பினத்தவர்கள் எனவும் இளைஞர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
குறித்த தாக்குதலானது மிகவும் மோசமான திட்டமிட்ட தாக்குதல் சம்பவம் என, வழக்கை விசாரிக்கும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிய வரும் பொதுமக்கள் உடனடியாக Harrow பகுதி பொலிசாரை தொடர்புகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் 23 வயது நபர் ஒருவரை கைது செய்து விசாரித்த பின்னர் விடுவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/uk/03/128938

Geen opmerkingen:

Een reactie posten