ஈராக் தலைநகர் மொசூல் நகரை கைப்பற்றிய ஐ.எஸ் தீவிரவாதிகள் அங்கிருக்கும் கிறிஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்கள் ஆகியோரை ஊரை விட்டு அடித்து விரட்டி விட்டு இஸ்லாமிய அரசை அமைத்துள்ளதாக அறிவித்தனர்.
இதனால் ஈராக் இராணுவத்திற்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 9 மாதங்களாக நடந்த யுத்தம் காரணமாக ஐ.எஸ் தீவிரவாதிகள் வசம் இருந்த மொசூல் நகரை ஈராக் இராணுவம் கடந்த வாரம் கைப்பற்றினர்.
இந்நிலையில் ஈராக் இராணுவத்தினர் மொசூல் நகரை கைப்பற்றிய போது, அங்கிருக்கும் சில தீவிரவாதிகளை உயிருடன் பிடித்துள்ளனர். அது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் ஈராக் இராணுவத்தினர், ஐ.எஸ் தீவிரவாதி ஒருவனை அடித்து துன்புறுத்துகின்றனர். அதன் பின் அவனை அங்கிருந்து அழைத்துச் சென்று, மலையின் உச்சியில் இருந்து தள்ளிவிடுகின்றனர்.
கீழே விழுந்த அந்த தீவிரவாதியை, இராணுவத்தினர் மேலே இருந்த நிலையில், தாங்கள் வைத்திருக்கும் துப்பாக்கியை வைத்து சுட்டுத் தள்ளியுள்ளனர்.
தீவிரவாதிகள் தான் இது போன்ற கொடூரமான செயல்களில் ஈடுபடுவர். அதே போன்று இராணுவத்தினரும் செய்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்து ஈராக்கின் உள்துறை அமைச்சர் தெரிவிக்கையில் இந்த வீடியோ நிரூபிக்கப்பட்டால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
http://news.lankasri.com/othercountries/03/128693?ref=right_featured
Geen opmerkingen:
Een reactie posten