தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 31 juli 2017

பாலூட்டும் படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய ஜனாதிபதியின் மகள்


உள்ளாடைகள் மட்டுமே அணிந்துகொண்டு குழந்தைக்கு பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார் கிர்கிஸ்தான் ஜனாதிபதியின் இளைய மகள்.
கிர்கிஸ்தான் ஜனாதிபதியின் இளைய மகள் வெளியிட்ட குறித்த புகைப்படம், குழந்தைகளுக்கு பாலூட்டுதல் மற்றும் பாலியல் ஆகியவற்றைப்பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.
இதனிடையே தனது புகைப்படத்திற்கு எதிராக எழுந்த சர்ச்சைகளை அடுத்து Aliya Shagieva அந்த புகைப்படத்தை நீக்கியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் அலியா ஷகீயேவா குறித்த புகைப்படத்தை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து, "என் குழந்தைக்கு எங்கெல்லாம், எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் நான் பாலூட்டுவேன்," என்னும் வாசகத்துடன் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
ஆனால் குறித்த புகைப்படம் பெருமளவில் விவாதப் பொருளானதை அடுத்து, தனியார் ஊடகம் ஒன்றில் பேசிய அவர், பெண்ணின் உடலை அதீதமாகப் பாலியல் தன்மையுடன் சித்தரிக்கும் கலாசாரத்தின் விளைவே இப்பிரச்னைக்குக் காரணம் என்றார்.
மேலும் "எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த உடல் கொச்சையானதல்ல. இது நன்று செயல்படக்கூடியது. இதன் நோக்கம் என் குழந்தையில் உடலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியது. இது போகப் பொருளல்ல," என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அலியா ஷகீயேவா பதிவேற்றிய புகைப்படத்தை சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் மட்டுமல்ல, அவரது பெற்றோரான ஜனாதிபதி அல்மாஸ்பியேக் அடாம்பாயேவ் மற்றும் அவரது மனைவி ரைசா ஆகியோரும் இச்சம்பவத்தால் மகிழ்ச்சியடையவில்லை என அலியாவே தெரிவித்துள்ளார்.
http://news.lankasri.com/othercountries/03/129758?ref=right_featured

Geen opmerkingen:

Een reactie posten