தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 juli 2017

கனடாவில் வேலைவாய்ப்பா? இலங்கையர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

கனடாவில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி மோசடிகள் இடம்பெறுவதாகவும், இவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள குறித்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
இலங்கை மற்றும் கனேடிய அரசாங்கங்களுக்கு இடையில் வேலை வாய்ப்பு தொடர்பில் எந்தவொரு ஒப்பந்தங்களும் இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடி செய்த பெண் ஒருவர் அண்மையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் சில விடயங்கள் வெளிவந்துள்ளன.
அதாவது, “இலங்கை மற்றும் கனேடிய அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்ற என்று தெரிவித்து இதற்காக ஒருவரிடம் இருந்து தலா 4 லட்சம் ரூபாவை பெற்றுக்கொள்வதாக தெரியவந்துள்ளது.
எனவே, இது போன்ற மோசடிகளில் இலங்கை மக்கள் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள வேண்டுகோள் விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/community/01/151174

Geen opmerkingen:

Een reactie posten