கலே காட்டுப்பகுதிக்குள் தங்கியிருக்கும் அகதிகள், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுக்கவே இந்த பெருஞ்சுவர் கட்டப்படுவதாக பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.
4 மீற்றர் உயரமும் 1 கி.மீ நீளமும் கொண்ட மாபெரும் சுவர் எழுப்புவதற்கு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டிருந்தது. அதை தொடர்ந்தே இப்பணிகளை பிரித்தானிய அரசு ஆரம்பித்துள்ளது என பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்காக, பிரித்தானிய அரசு சுமார் 2.7 மில்லியன் யூரோக்கள் வரை ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டப்பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவு பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten