இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், எல்லைப் பகுதியில் இருக்கும் மக்களும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில் அங்கு இருக்கும் அகதிகள் இந்த ஆண்டு முடிவதற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மாணவன் ஒருவர் தனது பள்ளியில் இருந்து சான்றிதழை அழுது கொண்டே வாங்கிக் கொண்டு வெளியேறிய சம்பவம் பலரையும் கவலையடையச் செய்துள்ளது.
இந்த சிறுவன் பெஷ்வர் அருகில் உள்ள அகதிகள் முகாமில் தான் பிறந்தான். பாகிஸ்தானிலே வளர்ந்த அவன் அங்கு பள்ளியில் படித்து வந்தான்.
இந்நிலையில் தற்போது பாகிஸ்தானை விட்டு குடும்பத்தோடு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், அவன் தான் படிக்கும் பள்ளிக்கு சென்று சான்றிதழை வாங்கினான்.
அப்போது பள்ளியில் இருந்து வெளியேறிய போது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத அவன் அழுது கொண்டே வெளியேறினான், இந்த புகைப்படம் இணைத்தில் வைரலாகி வருகிறது.
Geen opmerkingen:
Een reactie posten