3 தசாப்தங்களாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வந்த யுத்தம் தொடர்பில் பல உண்மைகள் குறித்த நூல் மூலம் வெளியிடப்பட்டுள்ளதால் இலங்கையர் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் குறித்த புத்தகம் தொடர்பில் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற புத்தக கண்காட்சியின் போதும் குறித்த புத்தகம் விற்பனையில் சாதனைப் படைத்தமையானது இந்த புத்தகத்திற்கு இலங்கையில் பலத்த கேள்வி நிலவியுள்ளதை நிரூபிக்கின்றது.
இந்த நிலையில் இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்ட போது இராணுவ சிப்பாய் ஒருவர் பிரபாகரனின் இரத்தங்கள் படிந்த மண்ணை சேகரித்ததாகவும் கமால் குணரத்ன வெளியிட்டுள்ள நந்திக்கடலுக்கான பாதையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இதன்போது குறித்த மண்ணை ஏன் சேகரிக்கின்றாய்? என மற்றுமொரு இராணுவ சிப்பாய் மண்ணை சேகரித்த சிப்பாயிடம் வினவியபோது,
'என்னுடன் பிறந்த 3 சகோதரர்கள் இராணுவத்தில் பணியாற்றிய போது பிரபாகரனால் கொல்லப்பட்டதாகவும், அவர்களை கொன்றவனை தாம் கொன்று பழிவாங்கிவிட்டதாக கூறி தான் இந்த இரத்தம் படிந்துள்ள மண்ணை கொண்டு சென்று எனது பெற்றோரிடம் காட்டி மகிழ்ச்சியடையவே இதனை சேகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதாக குறித்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten