தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 september 2016

அடையாள அட்டையை பெற்றுக்கொள்பவர்களுக்கு ஓர் அறிவித்தல்


நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் தத்தமது அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொண்டு அடையாள அட்டையைப்பெற்று கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
அதே போன்று ஒருவர் கற்கும் வயதினில் பெற்றுக்கொண்ட, தொழில் தகைமை மாணவன் என்று குறிப்பிட்ட அடையாள அட்டையை இறக்கும் வரை பாவனை செய்து கொண்டு வருபவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான வழிகளும், விதிமுறைகளையும் அத்தோடு பலருக்கு தெரியாத விடயங்களை பார்க்கலாம்.
முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்.
இலங்கையில் சட்ட ரீதியாக வசிக்கும் இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்
16 வயது நிரம்பியிருத்தல் வேண்டும்.
முதன்முறை அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்.
நிரப்பப்பட்ட ஆட்பதிவுத் திணைக்களத்தின், வீ 01 இலக்க விண்ணப்பப்படிவம்.
பிறப்புச் சான்றிதழ் அல்லது அண்ணளவான வயது பற்றிய சான்றிதழ்.
துறவறம் பூண்ட மதகுருவின் பெயராயின் பௌத்த அலுவல்கள் திணைக்களம் வழங்கிய அல்லது உபசம்பத சான்றிதழ் அத்துடன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.
கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சமயகுருமார் தமது சமய அமைப்புக்களின் பிரதம குருமார்களிடமிருந்தும், இந்து மற்றும் இஸ்லாமிய மதகுருமார் இந்து மற்றும் இஸ்லாமிய அலுவல்கள் திணைக்களங்களினால் இவர்கள் சமய குருமார்கள் என்பதை உறுதிப்படுத்த வழங்கப்பட்ட கடிதங்கள் போன்றவை அவசியமாகும்.
4 வர்ண புகைப்படங்கள் (13/8 x 7/8 அங்)

முத்திரைக் கட்டணங்கள்
• 16 தொடக்கம் 17 வயதுவரையான விண்ணப்பதாரர்களுக்கு 3 ரூபா முத்திரை.
• 17 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 13 ரூபா முத்திரை.
திருமணமான பெண்கள் தமது கணவரின் பெயரை தமது பெயருடன் சேர்க்கவிரும்பின் விவாகச் சான்றிதழின் மூலப்பிரதியும் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப்பிரதியும் அவசியம்.
தொழில்பற்றி குறிப்பிட வேண்டுமாயின் தொழில் பற்றிய சான்றிதழ் (3மாதத்துக்குள் பெறப்பட்ட) தொழில்சார் தகைமைகள் பெற்றவர்கள் அத்தகைமைகளை உறுதிப்படுத்துவதற்காக உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்தல் வேண்டும்.
உதா :- மருத்துவர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி போன்ற தொழில் தகைமை தொடர்பில் பட்டதாரிச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
விலாசம் எழுதப்பட்ட 30 ரூபா பெறுமதியான முத்திரை ஒட்டப்பட்ட கடித உறை (அடையாள அட்டை தயாரிக்கப்பட்டதும் சொந்த விலாசத்துக்கு அதனை தபாலில் அனுப்புவதற்காக இது).
மேலதிக விபரங்களுக்கு,
அமைப்பு பற்றிய தகவல் ஆட்பதிவுத் திணைக்களம்.சீ- 45,கெப்பெட்டிபொல மாவத்தை,கொழும்பு-05.திரு டீ.ஏ.டீ. ஷிந்தக.
தொலைபேசி: 94-11-2555616,தொலைநகல் இலக்கங்கள்: 94-11-2593634மின்னஞ்சல்:info@drp.gov.lkஇணையத்தளம்: www.drp.gov.lk

Geen opmerkingen:

Een reactie posten