டென்மார்க் குடிவரவுத் திணைக்கள இணையத்தளத்தில், நுழைவிசைவுக்கான விண்ணப்பத்தில், எந்த நாட்டவர் என்ற தெரிவுப் பட்டியல் ஒன்று வழங்கப்பட்டிருந்தது.
அதில் “தமிழீழம்” என்ற நாடும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக டென்மார்க் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருமாறு ஸ்ரொக்ஹோமில் உள்ள, இலங்கைத் தூதுவரை, இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியது.
இதையடுத்து, அவர் டென்மார்க் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதன் பின்னரே, தமிழீழத்தை ஒரு நாடாக அங்கீகரித்து பட்டியலிட்டமைக்கு டென்மார்க் மன்னிப்புக் கோரியதாகவும், அந்தப் பட்டியலில் இருந்து, தமிழீழத்தை நீக்குவதாகவும் உறுதியளித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten