தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 12 september 2016

லண்டனில் இப்படியும் ஒரு புலம்பெயர்ந்த தந்தை!

லண்டனில் வசித்து வரும் புலம்பெயர்ந்த தந்தை ஒருவர் அந்நாட்டு அரசாங்கத்திடம் இருந்து நிதி உதவிகளை பெறுவதற்காக அதிக குழந்தைகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
Migrant Arnold Sube (33) என்ற நபர் கடந்த 2012 ஆம் ஆண்டு பாரிஸில் இருந்து லண்டனுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளார்.
லண்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு கொடுக்கப்படும் நிதி உதவியை வைத்து தனது குடும்பத்தை நடத்தி வரும் இவர், அந்நாட்டு அரசாங்கத்தால் வழங்கப்படும் இன்னும் அதிகமான நன்மைகளை பெற்றுக்கொள்வதற்காக அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளவிருக்கிறார்.
தனது மனைவி Jeanne மற்றும் 8 குழந்தைகளுடன் Luton நகரில் வசித்து வரும் இவருக்கு ஏற்கனவே அந்நாட்டு அரசாங்கத்தால், £100,000 மதிப்பிலான நலத்திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, 3 படுக்கையறைகள் கொண்ட வீட்டில் வசித்து வரும் இவரது வீட்டு வாடகை ஒரு மாதத்திற்கு £1,278 ஆகும், இந்த தொகையினை அந்நாட்டு அரசாங்கமே கொடுத்து வருகிறது.
இதற்கிடையில், தனது குடும்பத்தினருக்கு இந்த வீட்டு வசதி போதவில்லை என்றும் 5 படுக்கையறைகள் கொண்டு வீடு வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், இந்நாட்டு அரசாங்கத்தால் வழங்கப்படும் அதிக நிதியுதவிகளை பெறவேண்டுமானால் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ள இவர், எனது குழந்தைகள் எதிர்காலத்தில் பிரித்தானியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவார்கள்.
அவர்கள் வளர்ந்து பணிக்கு செல்லுகையில், பிரித்தானிய அரசாங்கம் அவர்களிடம் இருந்து பணத்தினை சேகரித்துக்கொள்ளும் என கூறியுள்ளார்.
SWNS
SWNS
SWNS
http://news.lankasri.com/uk/03/109069

Geen opmerkingen:

Een reactie posten