தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 12 september 2016

ஈழத்து இளைஞனுக்கு தமிழ்நாட்டில் நடந்த கொடூரம்:மனதை நெகிழவைக்கும் சம்பவம்!

இந்தியா தமிழகத்தில் ஈழத்து இளைஞன் ஒருவனுக்கு ஏற்பட்ட அநீதியை அவரது நண்பர் ஒருவர் எமக்கு அளித்த மடல் இது..
தமிழகம் வாழ்ந்தார் கோட்டையில் இலங்கையர் அகதிகள் முகாமில் வசித்து வரும் மரியம் மதலேனா என்பவரின் மகன் திலீபன் வயது 27 இவர் கடந்த ஜூன் 28 இரவு 10 மணி அளவில் நான் வீட்டுக்கு வரும் போது என்னை ஏற்றி செல்ல திலீபனை துவக்குடிக்கு வரச்சொன்னேன் அவன் வருகின்ற வழியில் பெரியார் நகரை சேர்ந்த கலை , ஜெரால்டு மற்றும் சிலர் குடிபோதையில் ரோட்டில் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர் வண்டியில் வந்த திலீபனை மறித்து காட்டுமிராண்டி தனமாக அடித்துள்ளனர் இதனால் மயக்கத்தில் கீழே விழுந்த திலீபனை ரோட்டில் சென்ற இருவர் பைக்கில் ஏற்றி அருகில் உள்ள ஙைத்தியசாலைக்கு கொன்று சென்றார்கள்
தகவல் அறிந்து நானும் வைத்தியசாலைக்கு சென்றேன் அங்கு திலீபன் மூச்சி பேச்சின்றி இல்லாமல் இருந்தான் உடனே அங்குள்ள டாக்டர் அரசு பெரிய மருத்துவமனைக்கு கொண்டுபோங்கள் ரொம்ப சீரியஸா இருக்கு என்றனர் உடனே நண்பனின் காரில் கொண்டு சென்றோம் அங்கு உயிருக்கு போராடிய திலீபனுக்கு சரியான சிகிச்சை அளிக்காத காரணத்தால் திருச்சியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டுபோய் சேர்த்தோம்
அங்கு பரிசோதித்த டாக்டர்ஸ் ரொம்ப சீரியஸா இருக்கு உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது எங்களால முடிஞ்ச அளவுக்கு டிரீட்மென்ட் பன்றோம் ஆனால் தினமும் 25 முதல் 30 ஆயிரம் செலவாகும் என்றனர் அதன் பின்பு திலீபனை ICU இல் 25 நாட்கள் வைத்து சிகிச்சை அளித்தனர்
26 நாள் திலீபன் கோமாவில் இருந்து கண்ணை திறந்து பார்த்தான் இதற்கிடையில்  திலீபனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு துவாக்குடி போலீஸ் ஸ்டேஷனில் மனுகொடுத்தோம் அனால் அங்குள்ள அதிகாரிகள் மனுவை வாங்க மறுத்தனர் ஏன் என்றால் நாங்கள் இலங்கை அகதிகள் என்ற ஒரே காரணம் தான் பின்னர் சாலை மறியல் பண்ணிய பிறகு மனுவை ஏற்றனர்
அனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேக்க சென்ற எம் மக்களை போலீஸ் அதிகாரிகள் மிகவும் கேவலமாக திட்டினார்கள் அதன் பின்பு எந்த அரசியல் வாதியும் பார்க்காத எங்களை மரியாதைக்குரிய திரு . ராஜசேகர் அண்ணன் வந்து பார்த்து விட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்
அதன் விளைவாக கலை என்பவனை மட்டும் கைது செய்தார்கள் மற்றவர்கள் காணாமல் போய்ட்டார் தேடிக்கொண்டிருறோம் என்றனர் தாக்க பட்ட திலீபனுக்கு மூலையில் அங்கங்கே ரத்த கசிவும் அதனால் மூளை வீக்கமும் ஏட்பட்டது கழுத்துக்கு கீழே உள்ள எலும்பு முறிந்து விட்டது அதை ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றனர் 45 நாட்கள் பின்பு ஆபரேஷன் செய்தார்கள் இப்போது வீட்டில் வைத்து பார்க்கிறோம்
சுயநினைவு இல்லாமல் நடக்க முடியாமல் இருக்கும் திலீபனுக்கு இன்று வரை நீதி கிடைக்காமல் இருக்கிறது ….
நன்றி இவ்வாறு கண்ணுக்கு தெரியாமல் வெளியில் அறியாமல் பல கொடூரங்கள் எம்மக்களுக்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது பல ஊடகங்கள் இதை வெளிக்கொணர மறுக்கின்றன
ஈழ மக்களுக்கு குரல் கொடுக்கிறோம் என கூச்சலிட்டு தம் அரசியல் இலாபத்தை தேடும் தமிழக அரசியல்வாதிகளே…
எங்கே இருக்கின்றீர்கள்..?
உங்களுக்கு இது தெரியவில்லையா?
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு உதவ முன்வாருங்கள்
image-214image-215

Geen opmerkingen:

Een reactie posten