தற்போதைய ஐ.நா கூட்டத்தொடரில் இலங்கை பற்றி கூடிய கவனம் செலுத்தப்படா விடினும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் இன்னும் காலம் நீடிக்குமா? அல்லது மார்ச் மாதம் ஐ.நா உரிமை கூட்டத்தில் இலங்கையின் நிலைப்பாடு எப்படி இருக்கப்போகின்றது போன்ற பல்வேறு வினாக்களுக்கு மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனருமான ச.வி.கிருபாகரன் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் பதிலளித்துள்ளார்.
மேலும், இலங்கை அரசின் பலமான செயற்பாட்டில் தமிழரின் தரப்பின் வேலைத்திட்டங்கள் திருப்திகரமானதாக உள்ளதா? இலங்கையில் நடந்துமுடிந்த யுத்தத்தின்போது இரு தரப்புக்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள பற்றியும் ச.வி.கிருபாகரன் தெளிவுபடுத்தியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten