இந்த தாக்குதல் சம்பவத்துடன் சேர்கோ எனப்படும் பாதுகாப்பு நிறுவனத்தில் 20 காவலாளிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அதில் 5 அல்லது 6 பேர் நேரடி தொடர்புபட்டுள்ளதாகவும் அகதி அதிரடி கூட்டணி கட்சியின் இயன் ரின்டோல் தெரிவித்துள்ளார்.
இன்று (31) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இலங்கை அகதி சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் உடலில் காயங்கள் ஏற்பட்டு அவர் அதிர்ச்சியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று அதிகாலை 1.30 அளவில் குறித்த இலங்கையர் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவருடைய தலை, முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் காயங்கள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான தற்போது நபர் லிவர்பூல் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
Geen opmerkingen:
Een reactie posten