தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 10 april 2012

முல்லை- கொக்கிளாய் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது படையினர் தாக்குதல்!


 [ யாழ் நிருபர் ]
முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து நடத்துனரையும், சாரதியையும் தாக்கிய படையினர் மீண்டும் தமது காட்டுமிராண்டித்தனத்தை காண்பித்துள்ளனர்.
இன்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவிலிருந்து பிற்பகல் கொக்கிளாய் நோக்கி சென்ற பேருந்தை வழி மறித்து 5 படையினர் சீருடையுடன் அதில் ஏறியுள்ளனர்.
எனினும் பேருந்துக் கட்டணத்தை கொடுக்க முடியாதென கூறிவிட்ட படையினர் அதற்கான நடத்துனரிடம் முரண்பட்டும் கொண்டனர்.
இதன் பின்னர் ஒருவாறாக பணத்தை கொடுப்பதாக ஒத்துக்கொண்டு பயணம் செய்துள்ளனர்.
இதன்போது நாயாற்றுப் பாலத்தை தாண்டுங்கள் நாங்கள் யார் என்பதை காண்பிக்கின்றோம் என நடத்துனரை எச்சரித்துள்ளனர் படைனர்.
அவர்கள் குறிப்பிட்டதைப்போன்றே நாயாற்றுப் பாலம் தாண்டி தாம் இறங்கப்போவதாக கூறியுள்ளனர்.
அவ்வாறு அவர்கள் இறங்கிய பின்னர் பேருந்து தொடர்ந்து செல்லத் தயாரானபோது நடத்துனரை பேருந்திலிருந்து இழுத்து கீழே விழுத்தி படையினர் அவரை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து பயணிகள் சிலரும், சாரதியும் ஏன் நடத்துனரை தாக்குகிறீர்கள் எனக் கேட்டகச் சென்றபோது அவர்களையும் தாக்கிவிட்டு காட்டுப் பகுதிக்குள் குறித்த படையினர் ஓடி மறைந்துள்ளனர்.
இதனையடுத்து பேருந்து நின்ற இடத்திற்கு ஒரு தொகுதி படையினர் வந்து விசாரணைகள் நடத்தியதுடன், இவ்வாறான சம்பவம் எதிர்காலத்தில் நடக்காதெனவும் கூறியிருக்கின்றனர்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் சுமார் 5 மணி நேரத்தின் பின்னரே பேருந்து கொக்கிளாய் சென்றடைந்தது.
இதேவேளை இதேபோன்றதொரு சம்பவம் கடந்த மாதமும் கொக்கிளாயில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Geen opmerkingen:

Een reactie posten