தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 5 april 2012

பொய் மூலம் தொடுக்கப்பட்ட ஈராக் போர் அதிரும் உண்மை – பி.பி.சி


ஆவணப்படம்: பி.பி.சி

ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டு சாதாம் உசைன் அவர்களை தூக்கிலும் போட்டாயிற்று. ஆனால் நேற்றைய தினம் பி.பி.சி வெளியிட்ட ஆவணப்படத்தை பார்த்தபின்பு உலகம் ஒரு நொடி அதிர்ந்துதான் போயிருக்கும்.
ஒரு பொய்யை மட்டும் அதாவது அப்பொய்யை உறுதியான ஒருவர் தெரிவித்ததனால் அதை உண்மை என நம்பி ஈராக் மீது போர் தொடுத்து இன்று பெரும் அவமானத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றது அமெரிக்கா.
அமெரிக்காவுக்கு பொய்யான தகவலை வழங்கியவர்
அமெரிக்காவுக்கு பொய்யான தகவலை வழங்கியவர்
ஈராக்கில் சதாம் உசைன் ஆட்சியில் இரசாயன பொறியாளர் ஆக பணியாற்றிய ரபீட் அல் ஜனாபி என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டுள்ளது.
இவர் பல பொய்யான தகவல்களை அமெரிக்க அரசுக்கு வழங்கியிருக்கின்றார். ஈராக்கில் நடமாடும் இரசாயன ஆய்வுக்கூடம் இருப்பதாகவும் ஒரு முறை ஒன்றில் விபத்து ஏற்பட்டதில் 12பேர் உயிர் இழந்ததாகவும் தகவல் வழங்கியிருக்கின்றார். ஒரே இடத்தில் இருந்தால் அதை எதிரிகள் கண்டுபிடித்துவிடலாம் என்பதாலும் அடிக்கடி இடம் மாற்றலாம் தாக்குதலில் இருந்தும் தவிர்க்கலாம் என்பதாலும் நடமாடும் இரசாயன ஆய்வுக்கூடங்களை ஈராக் வைத்திருப்பதாகவும்,தான் அதில்தான் வேலை செய்வதாகவும் இவர் அமெரிக்காவுக்கு தகவல் வழங்கியிருக்கின்றார்.
தகவல் அடிப்படையில் அமெரிக்காவால் வடிவமைக்கப்பட்ட மாதிரி நடமாடும் ஆய்வுக்கூடம் www.rste.org
தகவல் அடிப்படையில் அமெரிக்காவால் வடிவமைக்கப்பட்ட மாதிரி நடமாடும் ஆய்வுக்கூடம் www.rste.org
தகவல் அடிப்படையில் அமெரிக்காவால் வடிவமைக்கப்பட்ட மாதிரி நடமாடும் ஆய்வுக்கூடம் www.rste.org
தகவல் அடிப்படையில் அமெரிக்காவால் வடிவமைக்கப்பட்ட மாதிரி நடமாடும் ஆய்வுக்கூடம் www.rste.org
இவர் வழங்கிய தகவல்களை அடிப்படையாக வைத்து நடமாடும் ஆய்வுக்கூடங்களின் மாதிரிகளை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. அது மட்டுமல்லாது அதை ஐ.நாவின் பாதுகாப்புச் சபையிலும் சமர்ப்பித்துள்ளது. அன்றைய அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் கொலின் பவெல் அவர்கள் ஐ.நாவில் பொறியாளர் சொன்ன பொய்யை உண்மையென நம்பி அப்படியே ஒப்பிவித்துள்ளார் அதையும் பொறியாளர் கூறிய பொய்யையும் பி.பி.சி மாற்றி மாற்றி காட்டி அதிரடித்துள்ளது.
அறிக்கை சமர்ப்பித்து உறையாற்றும் கொலின் பவெல் அவர்கள் www.rste.org
அறிக்கை சமர்ப்பித்து உறையாற்றும் கொலின் பவெல் அவர்கள் www.rste.org
ஜெர்மனிய உளவுத்துறையும், பிரித்தானிய உளவுத்துறையும் இத்தகவலின் நம்பகத்தன்மையில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தும் அமெரிக்க பிரிவு அசட்டை செய்ததாக ஆவணம் விரிகின்றது. ஏன் பொய் சொன்னாய் என்ற கேள்விக்கு சதாமின் ஆட்சியில் மக்கள் பெரும் துன்பங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்ததாகவும் அது தொடர்ந்தால் மக்களுக்கு ஆபத்து எனவும் அதற்காகவே சர்வாதிகார ஆட்சி நடத்தும் சதாமின் ஆட்சியை ஒழிக்க தான் பொய் சொன்னதாகவும் பி.பி.சிக்கு பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இரசாயன ஆய்வுக்கூடத்தை தேடும் அமெரிக்க இராணுவம் www.rste.org
இரசாயன ஆய்வுக்கூடத்தை தேடும் அமெரிக்க இராணுவம் www.rste.org
ஆனால் போர் முடிந்த பின்பு நடமாடும் இரசாயன ஆய்வுக்கூடத்தை ஈராக்கையே சல்லடை போட்டு தேடியும் ஒரு துரும்பு கூட கிடைக்கவில்லை, அதன் பின்பே உளவுப்பிரிவின் பல கட்ட விசாரனைகளுக்கு பின்பே இவ் உண்மை அமெரிக்காவுக்கு தெரியவந்துள்ளது. உண்மை அறிந்தவுடன் உண்மையில் உறைந்துபோனது அமெரிக்கா. தற்போது அந்த பொறியாளர் ஜெர்மனியில் அரசியல் தஞ்சம் கோரி குடியேறி பல ஆண்டுகள் ஆகின்றது.
பல நாடுகள் அழிக்கப்பட்ட வரலாறுகளை கதைகள் ஊடாகவே நாம் அறிந்திருப்போம் ஆனால் நிகழ்காலத்தில் ஒரு பொய்யினால் ஒரு நாடு வீழ்த்தப்பட்டுள்ளதை அறிகின்றோம். ஆனாலும் பெரும் வல்லரசான அமெரிக்கா தமிழீழ விடுதலைப்புலிகளின் விடயத்திலும் இதே தவறை கடந்த காலங்களிலும் செய்திருக்கின்றது. இப்போது மிக நிதானமாக இலங்கை விடயத்தில் கால் பதிக்கவே அமெரிக்க விரும்பும் என எதிர்பார்க்கலாம் எனவே அமெரிக்க சமர்ப்பிக்க உள்ள இலங்கையின் போர்க்குற்ற ஆதாரங்களும் இதே போன்று அதிரலாம் காத்திருப்போம்.
ஆவணப்படம்: பி.பி.சி

Geen opmerkingen:

Een reactie posten