தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 3 april 2012

படையினர் அசிங்கப்படுத்திய உருத்திரபுரம் சிவன் ஆலயத்தை சி.சிறீதரன் பா.உ. நேரில் பார்வையிட்டார்!


படையினரால் அசிங்கப்படுத்தப்பட்ட, இலங்கையின் சைவ ஈச்சரங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய பிரபலமும் பாரம்பரியமும் மிக்கதான உருத்திரபுரம் சிவன் ஆலயத்தை பா.உறுப்பினர் சி.சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டார்
உருத்திரபுரம் சிவன் ஆலயத்தின் கருவறைக்குள் இராணுவ சீருடையுடன் சென்று அங்கு புத்தர் சிலை இருப்பதாகவும், தராவிடில் கோவிலை இடித்து தரைமட்டமாக்கப் போவதாகவும் இலங்கை இராணுவத்தினர் அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து. அதிர்ச்சியடைந்த அக் கிராமக்கள் மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து பா.உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள் அங்கு சென்று நிலைமையை பார்வையிட்டுள்ளதுடன் அப் பிரதேசமக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளார்.
உருத்திரபுரம் சிவன் ஆலயம் இலங்கையின் சைவநெறி பாடத்திட்டத்துள் உள்வாங்கப்பட்ட இந்து சமயிகள் அனைவரும் அறிந்த ஒரு ஆலயமாகும்.
இவ்வாலயத்தை சுற்றி பாரம்பரயம் மிக்க தமிழ் மரபு நெடுங்காலமாக நிலவி வருகின்றது.
கிளிநொச்சி மேற்கு பிரதேசத்தின் பெருமளவு பகுதிகளைச் சேர்ந்த இந்து மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்ததாக இந்த ஆலயம் இருந்துவருகின்றது.
இவ்வாலயம் இலங்கை இராணுவத்தால் அசிங்கப்பட்டுள்ள விடயம் தெரிந்தபோதும் இலங்கையின் இந்து சமய அமைப்புகளும் சமயப் பெருந்தகைகளும் தட்டிக்கேட்காமல் இருப்பதையிட்டு இந்த ஆலயத்தை வழிபடுகின்ற அடியார்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten