தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 april 2012

செங்கல்பட்டு முகாம் உண்ணாவிரதிகள் மூன்று பேர் அவசரமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதி!


10வது நாளாக நேற்றோடு 14 பேர் விடுதலை கோரி செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உண்ணாநிலை போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். நேற்று மாலை மூவருக்கு உடல்நிலை மோசமானது.
 அவர்கள் பெயர் மற்றும் வயது வருமாறு:
1. தமிழ் (வயது : 35)
2. சேகர் (வயது : 32)
3. சுதர்சன் (வயது : 25)
இரவு நெருங்க, நெருங்க மேலும் உடல் நிலை மோசமானதால், சுமார் 1 மணியளவில் உடனடியாக அவசர ஊர்தி கொண்டுவரப்பட்டு, செங்கல்பட்டு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அங்கு மூவரும், தங்களுக்கு சத்து நீர் ஏற்றக் கூடாது என கோரினர்.
ஆனால், உடல்நிலை மோசமானதால், மருத்துவர்கள் காவல்துறை உதவியோடு, கட்டாயமாக ஒரு புட்டி சத்து நீர் ஏற்றப்பட்டுள்ளது. தற்போது இம்மூவரின் உடல்நிலை சற்றே தேறியுள்ளது. 2வது புட்டி சத்து நீர் ஏற்ற வேண்டாம் என தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் உண்ணாநிலை மேற்கொண்ட உடல் மோசமுற்ற மூவரை காவல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள செங்கல்பட்டு காவல் எல்லைக்குட்பட்ட காவல்துறை துணை ஆய்வாளர் திரு. தனசேகரன் என்பவர், இம்மூவரும் உணவு கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல், மோதல் கொலையில் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.
நேற்றுதான் தமிழக சட்ட மன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, தமிழக முதல்வர், காவல்துறையினருக்கு ஆதரவாக சப்பைக் கட்டு கட்டி ஆதரவளித்தார்.
இன்றே திரு. தனசேகரன் நடந்து கொண்ட முறையை பார்க்கும்போது, தமிழக காவல்துறையினரின் போக்கு மாற்றமடையவில்லை என்பதையே காட்டுகிறது.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில், மீதமுள்ள 11 பேரும் உண்ணாநிலை தொடர்கின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten