தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 26 september 2017

கொக்குவில் இந்துக்கல்லூரி அகதி முகாமை தாக்கிய இந்திய அமைதிகாக்கும் படை!-Part - 2

யாருக்காவது இந்த சிறுமியை தெரியுமா?

அப்பாவுக்கு கொஞ்சம் ஹிந்தி தெரியும். நாம் எல்லோரும் வெள்ளை கொடியுடன் வெளிய வந்த பொழுது எல்லோரையும் துப்பாக்கி முனையில் நடுவீதியில் இருக்கும் படி கட்டளையிட்டான் ஒரு இராணுவ அதிகாரி. வீதி ஓரத்தில் இருந்த கடைகளில் இருந்து மண்ணெண்ணெய் ,தேங்காய் எண்ணெய் பரல்கள் உடைந்து வீதி எங்கும் குளமாய் தேங்கி இன்றது. ஒரு தீ குச்சி போதும் எல்லோரையும் உயிருடன் எரிப்பதற்கு. அதற்கு ஏற்றாப்போல் அந்த இராணுவ அதிகாரி அவனுக்கு தெரிந்த மொழியில் எமக்கு புரியாத மொழியில் 😕😕 எம்மை நோக்கி ஏதேதோ சொல்லி கூச்சலிட்டான், மிரட்டினான். அந்த அதிகாரியின் பெயர் கேணல் மிஸ்ரா.
காயப்படட பல மக்கள் வகுப்பு அறைகளுக்குள்ளும் எம்மோடும் வந்து இருந்தனர்.நேரம் செல்ல செல்ல அவர்களின் நிலைமை மோசம் அடையவே அப்பா தனக்கு தெரிந்த ஹிந்தியில் அந்த இராணுவ அதிகாரியை சமாதானப்படுத்த முயன்றார். எவ்வளவு நேரம் இருந்திருப்போம் என சரியாக நினைவில்லை ஆனால் குறைந்தது ஒரு மூன்று மணி நேரமாவது நாம் அங்கே
இருந்திப்போம். ஒரு கட்டத்தில் அப்பாவுடன் சில சென் ஜான்ஸ் அமைப்பை சார்ந்த சில இளைஞர்களை தடுத்துவைத்துக் கொண்டு எம்மை எல்லோரையும் பிரதான பாடசாலைக்கு செல்லும்படி கட்டளையிட்டான் அந்த இராணுவ அதிகாரி.
மாலைவரை அப்பா முகாமுக்கு வரவில்லை. தடுத்து வைக்கப்படட ஒரு சென் ஜான்ஸ் அமைப்பை சார்ந்த இளைஞன் மாலை விடுவிக்கப்படட போது அவன் எமக்கு கூறிய
விடயம் எம்மை பீதி அடையச்செய்தது. ''அப்பாவை டாங்கியிலே கட்டி வைத்திருக்கிறான்கள். என்ன செய்யப்போறாங்கள் என்று தெரியவில்லை'' என்று அவசர அவசரமாக சொல்லிவிட்டு
அவன் தன் பெற்றோர்களை தேட சென்றுவிடடான். அம்மாவுக்கு இது தெரியாது நாங்கள் சொல்லவும் இல்லை. பாடசாலை பிரதான கேட் இருந்து பார்த்தால் வீதி தெரியும். அன்று மாலை முழுவதும் அங்கே நின்று கொண்டு அப்பா வருகிறாரா என பார்த்துக்கொண்டு இருந்தோம். பொழுது மங்கி இருளத்தொடங்கிவிட்டது. பாடசாலை கடவையை தாண்டி
வெளியே போகமுடியாது. அங்கு நின்ற பெரியவர்கள் எமது பாதுகாப்பு கருதி எம்மை அனுமதிக்கவில்லை.
அப்பா ஒரு சக்கரை நோயாளி. முதல் நாள் மாலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாததால் அவர் மயங்கி விழுந்துள்ளார். அங்கு நின்ற அதிகாரிகள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை அப்பாவை போக அனுமித்தார்கள். அப்பா அன்று உயிர் தப்பி வந்ததே எங்கள் அதிஷ்டம்.
பாடசாலை வகுப்பறையில் தங்கியிருந்த இருபத்தாறு பொதுமக்கள் சம்பவ இடத்திலயே கொல்லப்பட்டனர்.படுகாயமடைந்தவர்களில் பதின்நான்கு பேர் மருத்துவ வசதிகளற்று மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலும், மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இச் சம்பவத்தில் யாழ் பல்கலைக்கழக கல்வியற்துறைப் பீடாதிபதி பேராசிரியர் சந்திரசேகரம உட்பட மொத்தம் நாற்பது பேர் உயிரிழந்ததுடன், எண்பது பேர் படுகாயமடைந்தனர்.
உரிய முறைப்படி தகனம் செய்வதற்கான சூழ்நிலையில்லாததால் இறந்தவர்களின் சடலங்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஒரே குழியில் புதைக்கப்பட்டன.
அன்றைய தினம் அமைதி காக்க வந்த படைகளால் நடாத்திய தாக்குதலில் கொல்லபட்ட 34 பொதுமக்களின் பெயர் விபரங்களும் வருமாறு.
01 இராசையா பஞ்சலிங்கம் - 43
02 இராசையா செல்வராணி - 37
03 இராமு இராசு கமம் 60
04 நாகரத்தினம் விஜயரதத் pனம் - 46
05 நடராசா இராசகுமாரன் - 44
06 நடராசா இராசராசேஸ்வரி - 24
07 நடராசா குணராணி - 35
08 நடராசா தமிழ்ச்செல்வி மாணவி 10
09 நடராசா சபேஸ்குமார் மாணவன் 6
10 நடராசா ரமதி மாணவி 13
11 நடேசு பரமேஸ்வரி - 51
12 நல்லையா பாக்கியம் - 50
13 கநi; தயா சஙக் ரபப் pளi; ள வியாபாரம ; 65
14 கந்தவனம் மகேஸ்வரி - 52
15 குணபாலசிங்கம் பத்மசிறி மாணவன் 8
16 பரமு தங்கமணி வீட்டுப்பெண் 24
17 பரமேஸ்வரன் மனோன்மணி - 35
18 பரமேஸ்வரன் மாலினி - 1
19 தர்மலிங்கம் நிசாந்தன் - 2
20 துரைச்சாமி குமாரசாமி முதியவர் 72
21 தம்பிராசா நடராசா முதியவர் 61
22 வேணுகோபால் மகாதேவன் - 41
23 மகாதேவன் இராசம்மா - 28
24 மகாதேவன் பாலமுருகன் மாணவன் 9
25 மகாதேவன் வேணுகிருஸ்ணா மாணவன் 7
26 மகாதேவன் விக்கினேஸ்வரன் மாணவன் 10
27 அன்னசிங்கம் கமலாதேவி வீட்டுப்பணி 33
28 பெரியதம்பி இராசையா - 30
29 பேராசிரியர் சோ.சந்திரசேகரம் பேராசிரியர் -
30 செல்வநாயகம் மாணிக்கரத்த் pனம ; முதியவர் 69
31 செல்லர் திரவியம் - 53
32 சுப்பிரால் கோவிந்தசாமி முதியவர் 72
33 சிவகுரு செல்லத்துரை முதியவர் 85
34 விஸ்வநாதி விஜயரத்தினம் கூலி 40
அந்த முகாமில் என்னை மிகவும் பாதித்த இன்னொரு விடயம். அப்போ ஒரு ஆறு அல்லது ஏழு வயது இருக்கும் அந்த சிறுமிக்கு. கையில் ஒரு கை குழந்தையுடன் அவள் நின்றிருந்தாள். அவள் பக்கத்தில் ஒரு உயிர் அற்ற ஒரு பெண்ணின் உடல். ஒரு கால் துடையுடன் முற்றாக சிதைவடைந்த நிலையில். தன் குடும்பத்தில் எல்லோரும் இறந்துவிட்டதாகவும் , தானும்
கை குழந்தையான தங்கை மட்டும் உயிரு டன் இருப்பதாக கூறினாள்,
யாருக்காவது இந்த சிறுமியை தெரியுமா?

https://www.facebook.com/photo.php?fbid=1657838254228823&set=a.106381366041194.12000.100000079943024&type=3&theater

Geen opmerkingen:

Een reactie posten