தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 23 september 2017

வரலாற்றில் முதன்முறையாக ஒற்றையாட்சிக்கும் பெளத்ததிற்கு முன்னிடம் வழங்கவும் தமிழ் கட்சிகள் சம்மதம்!!


வரலாற்றில் முதன்முறையாக ஒற்றையாட்சிக்கும் பெளத்ததிற்கு முன்னிடம் வழங்கவும் தமிழ் கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக நரியாட்சியின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெருமிதம் அடைந்துள்ளார்.
அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவுன் இடைக்கால அறிக்கை குறித்து பேசும் போது அவர் இதனை தெரிவித்தார்.
இடைக்கால அறிக்கைதயாரிப்பதற்கான வழிகாட்டல் குழுவில்வ அங்கம் வகித்து ரணிலின் இப்பாராட்டு பத்திரத்தை பெற வழவகை செய்தவர்கள் ஈபிடிபி டக்ளஸ் , தமிழரசுக்கட்சி சுத்துமாத்துமந்திரன், சம்பந்தன் மற்றும் மனோ கணேசன் சுவாமிநாதன் ஆகிய பெருந்தகைகள் ஆவார்கள்.
1972,1978 குடியரசு யாப்புகளில் தமிழர்கள் முன்வைத்த அடிப்படைக்கோரிக்கைகள் நிராகரிக்கப்ப்ட்டதை தொடர்ந்து தமிழர் பிரதிநிதிகள் அந்த யாப்பு உருவாக்கத்தில் இருந்து வெளியேறியிருந்தனர்.
அதனால் ,தமிழ்ர்களின் சம்மதம் இன்றி உருவான யாப்பு என்பதால் , அதை திருத்தி தமிழர்களின் சம்மதத்தோடு யாப்பு உருவாக்க வேண்டும் என பாரிய சர்வதேச அழுத்தம் இதுவரை இருந்தது.
இம்முறையோடு, "தமிழர்களின்" சம்மததோடு அந்த யாப்பு வருகிறது.
அதே பழைய அம்சங்களுடன் வரும் புதிய யாப்பு தமிழர்களினதும் சம்மதத்தை பெற்றுக்கொடுத்து இந்த பிரச்சினையியே அரங்கில் இருந்து அகற்றும் திட்டம் நிறைவேறுமா?
ஏற்கனவே சர்வதேச விசாரணை இனி வேண்டாம் என
கூறி பொறுப்புக்கூறலிக் இருந்து அரசாங்கத்தை சுத்துமாத்து மந்திரன் காப்பாற்றி இருந்தார்.
அடுத்து இப்போது , ஒற்றையாட்சி அரசியலமைப்பு.......
{இதே ரணில் தமிழர்களின் ஆயுதரீதியிலான விடுதலைப்ப்போராட்டத்தை 2004 இல் கருணாவை பயன்படுத்தி அதலபாதாளத்திற்கு தள்ளியமை குறிப்பிடத்தக்கது. எல்லா சிங்கள அரசியல்வாதிகளையும் விட ரணில் விக்கிரமசின்ங்க ஆபத்தான நரி என விடுதலைப்புலிகள் கணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தன் லண்டன் மாவீரர்தின உரையொன்றில் இதனை அழகாக குறிப்பிட்டி இருந்தார்
Ulaka Maka Saanakkiyan

இந்த இடைக்கால அறிக்கை பல்வேறு பட்ட மோசமான பண்புகளை கொண்டு இருக்கிறது 
1. காணி அதிகாரங்கள் மத்திய மற்றும் மாகாணம் என சொல்ல படுகிறது ..ஆனால் தேச பாதுகாப்பு என்கிற விடயம் முன் நிறுத்தப்பட்டு மத்திய அரசு மாகாண அரசின் சம்மதம் இன்றி காணிகளை கையாள கையக படுத்த
 முடியும் என்கிற விடயம் சொல்ல படுகிறது .இதன் ஊடக காணி அதிகாரம் முழுமையாக மத்திய அரசுக்கு உரியதாக சொல்ல படுகிறது 
2. போலீஸ் அதிகாரங்கள் பற்றி தெளிவாக பேச பட வில்லை 
3. மிக தெளிவாக சரத்து 9 ன் கீழ் புத்த மதம் முன்னுரிமையான மதம் என ஏற்று கொள்ளப்படுகிறது .இங்கே தமிழரசு கட்சின் பின்னணிப்பிலும் இது ஏற்று கொள்ள படுவதாக சொல்ல பட்டு இருக்கிறது 
4. சரத்து 2 இன் கீழ் ஒற்றையாட்சிக்கு பதில் ஒத்த நாடு என்கிற சொல் பயன்படுத்த பட்டு இருக்கிறது . அனால் சிங்கள பதம் தெளிவாக ஒற்றையாட்சி என்கிற விடயத்தை சொல்லை நிற்கிறது .இங்கே சுதந்திர கட்சி , மகிந்த கட்சி , ஹெல உறுமய எல்லா கட்சிகளும் வேறுபட்ட தமிழ் சொல் பயன்பட்டதை கூட ஏற்று கொள்ள வில்லை என்பதை அதனுடைய பின் இணைப்பில் சொல்லி இருக்கின்றன 
5. தமிழர்கள் பேசும் அடிப்படை விடயங்களான தனி தேசம் , சுய நிர்ணய அழகு , மரபுரிமை என்கிற அடிப்படை விடயங்கள் எங்கும் ஏற்று கொள்ள படவில்லை 
6. மொத்தத்தில் ஒற்றையாட்சிக்குரிய சகல பண்புகளையும் பெயரையும் சரியாக சுட்டி இந்த இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்க பட்டு இருக்கிறது 
7. நிதி அதிகாரங்கள் இப்போது நடமிமுறையில் உள்ள குழப்பமான விடயங்களே சொல்ல படு இருக்கிறது 
8. இறுதியாக அதிகாரமுள்ள பிரதமர் என்கிற ரணிலின் கனவுக்கு ஒரு அடித்தளம் இந்த அறிக்கை என சொல்ல முடியும்.

Geen opmerkingen:

Een reactie posten