தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 26 september 2017

கொக்குவில் இந்துக்கல்லூரி அகதி முகாமை தாக்கிய இந்திய அமைதிகாக்கும் படை!-Part - 1

எங்கள் அப்பா என்றுமே எங்கள் ஹீரோ

8 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. இப்போது நான் ஒரு தந்தையாய் என் தந்தையை உணருகின்றேன் . இப்போது நாம் வெளிநாடுகளில் பாதுகாப்பு சூழலில் வாழ்ந்தபோதும் எம் பிள்ளைகளை வளர்க்க எவ்வளவு சிரமப்படுகிறோம்.

என் அப்பாவின் காலம் அப்படியல்ல. போர் காலம். விமானத் தாக்குதலுக்கும், எறிகணை வீச்சுகளுக்கும் மத்தியில் வாழந்த காலம். அப்பாவின் தியாகத்தின் சிறு உதாரணம்.

1987 ஆண்டு. இந்திய இராணுவம் பலாலியில் முகாமில் இருந்துமுன்னேறிக்கொண்டு இருந்தது. நாம் அனைவரும் கொக்குவில் இந்து கல்லுரியில் தஞ்சம் புகுந்திருதோம். குளப்பட்டி சந்தியில் இந்திய இராணுவத்திக்கு ஏட்படட இழப்புக்கு பழிதீர்க்க அவர்கள் தேர்ந்தெடுத்த இடம், உயிர் பயத்தில் சிறுவர்கள் பெரியவர்கள் என ஆயிரக்கணக்கான
மக்கள் தஞ்சம் புகுந்திருந்த எமது அகதி முகமையே

1987 ஒக்டோபர் இருபத்து நான்காம் நாள் காங்கேசன்துறை வீதி வழியாக யாழ் நகரம் நோக்கிக் கவசவாகனங்கள், டாங்கிகள் சகிதம் முன்னேறிய இந்தியப் படையினர் கொக்குவில் இந்துக்கல்லூரியை வந்தடைந்தது. நள்ளிரவு நேரம். எம்மை காக்க வந்த படை எம்மை இப்படி கொடுமையை தாக்கும் என நாம் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

டாங்கிகள் எமது கட்டிடத்தின் சில அடிகளுக்கு முன் நிறுத்தி பிராங்கிக்குழல்கள் எமது
கட்டிடத்தினை நோக்கி திருப்பியவுடன் யன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்த அப்பா
நடக்க விருக்கும் பயங்கரந்தை உணர்ந்து இருக்க வேண்டும். எம்மை எல்லோரையும் இழுத்து
கொண்டு கட்டிட படிகளுக்கு கீழ் தள்ளிவிட்டு எமக்கு மேல் படுத்துக்கொண்டார். சில வினாடிகளில் நான் தங்கி இருந்த வகுப்பறை நோக்கி டாங்கிகளிலிருந்து குண்டுகள் சரமாரி ஏவப்பட்டது. எங்கும் மரண ஓலங்கள். விடியும் வரை இந்த தாக்குதல் தொடர்ந்தது. நாங்கள்
அகதிகள் என்று அழுது குளறி கூச்சல் இட்ட போதும் தாக்குதல் நிற்கவில்லை.

விடிந்ததும் யாருமே கட்டிடத்தை விட்டு வெளியே வரவில்லை. எல்லோருமே உள்ளே இருந்து கொண்டு அழுது கொண்டிருந்தார்கள். இப்படியே இருந்தால் நாங்கள் எல்லோரும் சாகவேண்டியது என் அப்பா நினைத்திருப்பார் போல. முதல் ஆளாக ஒரு வெள்ளை வேட்டியை கிழித்து கொண்டு வெளியே வந்தார். அவரை தொடர்ந்து நாங்களும் எம்மை தொடர்ந்து மீதம் உள்ள மக்களும் வெளியே வந்தனர். வகுப்பறை எங்கும் இறந்த உடல்கள்.
அன்று எங்கள் அப்பா எங்களை படிக்கட்டுகளுக்குள் தள்ளி விடாமல் இருந்திருத்தால்......?அல்லது காலையில் வெள்ளை கொடியுடன் வெளியே போகாமலிருந்திருந்தால் .....?இன்று இதை
எழுதுவதற்கு நானும் இருந்திருக்க மாட்டேன். எங்கள் அப்பா என்றுமே எங்கள் ஹீரோ.


Prabhaharan Visagapathy

https://www.facebook.com/photo.php?fbid=1653290464683602&set=a.106381366041194.12000.100000079943024&type=3&theater

இச்சம்பவத்தை நேரடியாக அனுபவித்த குடும்பத்தில் என் குடும்பமும் (தாவடி கார்க்கார பஞ்சலிங்கம் குடும்பம்)அடங்கும்!முதல் நாள் champion lane வரையிலும் முன்னேறிய இந்திய ராணுவம் பின்வாங்கி உப்புமடம் பிள்ளையார் கோயிலில் சம்பவ நாள் மதியம் வரை தங்கியிருந்தது!நானும் என் நண்பனும் தாவடி சந்திவரை சென்று பார்த்துவிட்டு ஆமியை கண்டதும் திரும்பவும் KHC க்கு வந்து சம்பவத்தை சிலருக்கு சொல்லிக்கொண்டு அதிபர் அறைக்கு மேலே உள்ள தளத்தில் சீட்டு ஆட தொடங்க,செல் சத்தம் மீண்டும் ஆரம்பத்தது,பலத்த துப்பாக்கி குண்டு சத்தங்களுடன் இந்திய ராணுவம் முன்னேறிவர நான் hero நினைப்பில் kks வீதிக்கு KHC இல் இருந்து செல்ல,இராணுவம் குளப்பிட்டிச்சந்தியில் நிற்க,நான் மஞ்ச வண்ணப்பதி கோயிலில் இருந்த அகதிகளுடன் அகதியானேன்!கோபுரத்தின் கீழே அனைவரும் கூடியிருந்து இந்திய ராணுவம் KKS வீதியால் செல்வதை அச்சத்துடன் பார்த்திருக்க ஒரு ஆமி திரும்பி வந்து முழங்களில் அமர்ந்தான்,நமக்கு பூசை ஆரம்பிக்கிறான் என்பது விளங்க எல்லோரும் உள்ளோ போங்கள் சுடப்போகிறான் என்று சொல்ல.பிளாஸ்டிக் செல் கோபுர வாசலில் விழுந்து வெடிக்க....அடுத்தநாள் கோயிலின் பின் வீதிவழியாக நான்,பாலேந்திரன்,சுரையன் என நினைக்கிறேன் டாக்டர்ஏ காம்பரம் வீட்டு ஒழுங்கையால் இணுவில் சென்று இணுவில் சிவகாமி அம்மன் கோயிலடியால் சென்று KHC இக்குள் பின்பக்கத்தால் நுழைந்தோம்,அங்கே மைதானத்தில் கிடங்குகள் வேட்டிக்கொண்டிருந்தார்கள்,என்னவென்று கேட்டால் ஆமி செல்லடித்து முப்பது பேர்வரை இறந்துவிட்டதாக கூறினார்கள்!ஆமி புலிகள் உள்ளிருப்பதாக கூறி உள்ளே சில வாரங்கள் அதன் பின் வரவில்லை,வெளியில் ஆமி,உள்ளே மக்கள்!நான் அன்றே எனது தங்கை,தம்பியுடன் பின் பக்கத்தால் சென்றுவிட்டேன்!அம்மா,அப்பா சில நாட்களின் பின் மதி உடைத்து மக்கள் நான் சென்ற பாதை வழியாக வெளியேறும்போதே வெளிவந்தார்கள்!எங்கள் குடும்பமும் படிக்கட்டின் கீழே இருந்ததால் தப்பியது!வெள்ளைக்கொடியுடன் விசாகபதி ஆசிரியர் ஆமியிடம் சென்று உரையாடியதாகவும் ஆமி அவரை பீரங்கி அருகில் விட்டு பயமுறுத்தியதாகவும் கேள்வி,உண்மைதானா?நமது சைக்கிள்கள் ...செல்லிலிருந்து நமது பின் காணியின் உரிமையாளர்(நந்தாவில் ஒழுங்கையில் புஸ்பராணி அக்காவின் அண்ணன் குடும்பம்)குடும்பத்தில் அவரும் ஒரு பிள்ளையுமே தப்பினர்!நடந்த அத்தனை கொடுமைகளும் இன்னும் கண்ணின் முன்!

பஞ்சலிங்கம் ஸ்ரீபாலன்

Geen opmerkingen:

Een reactie posten