தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 5 september 2017

ஜகத் ஜயசூரியா பற்றி இராணுவத்தரப்பில் இருந்து வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!


கடந்த காலத்தில் ஜகத் ஜெயசூரிய இராணுவத் தளபதியாக கடமையாற்றிய போது தனக்கும் அநியாயங்கள் நடந்ததாக இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
இருந்தபோதிலும் அதனை தான் வெளிக்காட்டவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் தானும் இராணுவத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட போதும் இராணுவத்தினருக்கு எதிராக கதைக்கவில்லை என்றும் ஜகத் ஜயசூரிய இராணுவத் தளபதியாக கடமையாற்றிய போது தனக்கு நடந்த அநியாயங்கள் பற்றி தான் எதுவும் சொல்லவில்லை என்றும் குறிப்பிட்டார்.
ஒரு இராணுவத் தளபதிக்கு எதிராக பொது இடத்தில் வைத்து குற்றஞ்சுமத்தப்படுவதானது முழு இராணுவத்தினர் மீதும் விதிக்கப்படும் அழுத்தங்கள் எனவும் அமைச்சர் பொன்சேகா இராணுவம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் இராணுவத்தினரை கேவலப்படுத்தும் செயல் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கடந்த யுத்தக் காலத்தில் எந்தவொரு இராணுவத்தினரும் யுத்தக்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும் இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
தனிப்பட்டவர்களின் பிரச்சினைகளை இராணுவத்தினரின் மீது திணிக்க வேண்டாம் எனவும் இதன்போது இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் யுத்தக் களத்தில் 28,000 இராணுவத்தினர் கொல்லப்பட்டு, அங்கவீனமுற்றது. இவ்வாறான கருத்துக்களை கேட்பதற்காக என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய எந்தவொரு சந்தர்ப்பதிலும் மனித உரிமைகளை மீறவில்லை என்றும் இதன்போது குறிப்பிட்டார்.
தற்போதும் சரத் பொன்சேகாவை தான் மதிப்பதற்கான காரணம் அவர் இராணுவத்திற்கு செய்த உயர் சேவைக்காகவே அன்றி அவர் அமைச்சர் என்பதால் அல்லவென்றும் இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/04/139491?ref=rightsidebar-manithan

Geen opmerkingen:

Een reactie posten