வரலாற்றில் முதற்தடவையாக தமிழ்க் கட்சிகள் ஒரே தேசத்தை உருவாக்குவதற்கும் பௌத்தமதத்துக்கு முதலிடம் வழங்குவதற்கும் உடன்பட்டு தமிழினத்தின் முதுகில் ஆழமாக குத்திவிட்டார்கள் என ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பிரதமராக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்!
என்ன வேதனையான விடயம் என்றால் பல லட்சம் உயிர்களை இழந்தது இருப்பவற்றையும் விட்டுக்கொடுக்க என்பதை அப்பாவிப் படித்த பட்டதாரி தமிழருக்கு கூட இன்னமும் விளங்கவில்லை என்பதே!
இந்திய இலங்கை ஒப்பந்தம் கைசாத்தான போது நானூறு போராளிகளின் உயிரே விலை போயிருந்தது!ஆனால் அதன் பின் ஏற்பட்ட பதவிப்போட்டிகளால் ஏற்பட்ட மோதலில் சில ஆயிரம் மக்களே பலியானார்கள்(இங்கு சில ஆயிரம் என்பது இன்றைய நிலையுடன் ஒப்பிட்டே அன்றி உயிர்கள் மதிப்பற்றவை என்றல்ல)!
ஆனாலும் வடக்கு கிழக்கு இணைந்து தமிழ் முதலமைச்சரும் உருவாகியிருந்தார்!
வெற்றிகரமாக சிங்கள அரசுடன் இணைந்து(பிரேமதாசா அரசு) இந்தியாவை பகைவராக்கி வெளியேற்றி சில இந்திய இராணுவத்தி கைது செய்து ஒப்படைத்து அசிங்கப்படுத்தி பின் ராஜீவ்,பிரேமதாசா ,சிங்கள புலிகள் யுத்தமென .....
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக வடக்கு கிழக்கு மாகாண இணைந்த சபை,உடைந்து தனி மாகாண சபைகளாக பிரிந்து பிரதேச சபை அது இது என்று போய் இன்று எது மிச்சம் என்றால் பதவி தமிழ்க் கட்சிகளுக்கு,மக்களுக்கு ??
இதுவரை இருந்த கோவணமும் மக்கள் தேர்ந்த தலைமைகளே உருவி சிங்கள அரசுக்கு தங்கள் விசுவாசம் காட்ட ஒப்படைக்கப்பட்டது!
இப்போது மகிழ்ச்சியா தமிழ் ஈழம் புலிகள் தருவார்கள் என்று தொலைநோக்கோடு சொன்ன கனவான்களே!!
இப்போது ஐனா வில் நீங்கள் செய்வதெல்லாம் "அம்மா,தாயே என் பிள்ளைக்கு துணியில்லை ,உணவில்லை,கற்பில்லை,.....பிச்சை போடுங்க,உங்கள் பிளைகுட்டி நல்லாயிருக்கும் " என்பதுதான்!
இதுதான் மானமிழந்த தமிழன் நிலை!
அதுசரி
மானத்தமிழன் என்றொருவன் இருந்தானே அவனை யாராவது கண்டீர்களா?
Geen opmerkingen:
Een reactie posten